பக்கம் எண் :

204மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

7. ஒரு நாட்டார் மற்றொரு நாட்டாரொடு மணவுறவு கொள்வதற்கான    வழிவகைகளை
 வகுத்தல்.

8. ஒருவர் எந்நாட்டையுஞ் சுற்றிப்பார்க்க ஏதுந் தடையிராமை.
9. செல்வ நாடுகள் எளிய நாடுகட்கு எல்லா வகையிலும் உதவி செய்தல்.
10. எல்லாரும் வாழவேண்டும் என்னும் பொதுநலக் கொள் கையை எங்கும் பரப்புதல்.

8. உலகக் கூட்டாட்சியின் நன்மைகள்

  1. உலக அமைதியும் ஒற்றுமையும்.

  2. நோயற்ற மக்கள் நெடுநல் வாழ்வு.

  3. மக்கள் சமன்மை.

  4. கவின் கட்டடங்களும் மாடமாளிகை கூடகோபுரங் களும் வானளாவிகளும் அருநூல்களும் தொல் பொருள் களும் காக்கப்படல்.

  5. நாடுகளின் செலவுக்குறைவு.

  6. விளைவுப்பெருக்கம்.

  7. வறுமை நீக்கம்.

  8. அறிவு வளர்ச்சி.

  9. பண்பாட்டு வளர்ச்சி.

  10. இறும்பூதுப் புதுப்புனைவாக்கம்.

  11. கடல்கோள், வெள்ளம் முதலிய ஆர்கலிச் சேதக் குறைப்பு.

  12. மக்கட்டொகை மட்டுப்பாடு.

  13. பாலைநிலப் பண்படுத்தம்.

  14. காரின மாந்தர் தோற்றத்திருத்தம்.

  15. மக்களின வுயர்வு.

  16. கடல்நீரைக் குடிநீராக்கல், கதிரவனொளியைச் சமையற் குப் பயன்படுத்தல் முதலிய மாற்றங்கள்.

      இத்தகைய விண்ணக இன்ப வாழ்வை மண்ணகத்தில் நிறுவுதற்கு, உலக முதுநாடாகிய இந்தியாவே உலக முது மொழியாகிய செந்தமிழைத் துணைக்கொண்டு, விரைந்து அடிகோல வேண்டும்.