கண்டித்தனர். "ஆடு கொழுத்தால் ஆயனுக்கு ஊதியம்" என்பதை அவர் அறியவில்லை. இந்தியாவில் 1/3 பங்கைக் கைப்பற்றி, 545 உள்நாட்டரசுகளையும் அடக்கி அவற்றைப் படை குறைக்கச் செய்து, ஒரு மாபெரும் படை யமைத்துப் பேராயத் தலைவரிடம் ஆங்கிலர் ஒப்படைத் திராவிடின், நேரு நைசாமை (Nizam) வென்றிருக்கவே முடியாது; உள்நாட்டர செல்லாம் ஒன்று சேர்ந்திருப்பின், ஆங்கிலர் நேரடியாக ஆண்ட நிலப்பகுதிகளையும் பெற்றிருக்க முடியாது. ஆகவே, இந்தியாவை முதன்முதலாக ஒன்றுபடுத்திக் குடியரசு நாடாக்கித் தந்த பெருமை, ஆங்கிலரையே முற்றும் சாரும். இனி, அரை நூற்றாண்டிற்குமேற் போராடி முழு விடுதலை பெற்ற இந்தியத் தேசியப் பேராயத்தைத் தோற்று வித்தவரே, ஓர் ஆங்கிலர் என்பதை இன்னும் மாபெரும்பாலார் அறியவில்லை; அறிந்தவரும், ஒருசிலர் தவிரப் பிறர் உணர வில்லை. 1931-ல் இலண்டனில் நடைபெற்ற 2ஆம் வட்டமேசை மாநாட்டில், பேராதன் (மகாத்மா) காந்தியடிகள் பின்வருமாறு கூறியிருக்கின்றார்: "நான் இந்தியத் தேசியப் பேராயத்தின் சார்பாகச் செய லாற்றும் ஓர் ஏழைத் தாழ்மையான முகவன். பேராயம் எத்தகைய தென்றும், எதற்காக ஏற்பட்டதென்றும், நாம் நினைவுறுத்திக் கொள்வது நலமாகும். அதன்பின்னே நீங்கள் என்பாற் கண்ணோட்டங் காட்டுவீர்கள். ஏனெனின், என்மேற் சுமர்ந்துள்ள சுமதி உண்மையில் மிகப் பெரியது. பேராயம் இந்தியாவில் எமக்குள்ள மிகப் பழமையான அரசியலமைப் பகம் என் பதில் ஒரு தவறுமில்லையென்று கருதுகின்றேன். அது தோன்றி ஏறத்தாழ 50 ஆண்டாகின்றது. அதன் காலமெல்லாம் இடையறாது ஆண்டுதோறும் மாநாடு கூட்டப்பட்டுள்ளது. அது அதை ஒரு தேசிய அமைப்பகம் என்று காட்டுகின்றது. அது எந்தத் தனிப்பட்ட இனப் பிரிவையாவது, எந்தத் தனிப்பட்ட வகுப்பையாவது, எந்தத் தனிப்பட்ட விருப்பக் கூட்டத்தையாவது படிநிகர்க்கவில்லை. அது எல்லா இந்தியர் நன்மைக்காகவும் எல்லா வகுப்பிற்காகவும் பாடுபடக் கோருகின்றது. அதைத் தோற்றுவிக்குங் கருத்து முதன்முதல் ஓர் ஆங்கில மூளையில் உருவாயிற் றென்று சொல்வது, எனக்கு மாபெரு மகிழ்ச்சியைத் தருகின்றது. ஆலன் ஆகத்தேவியன் கியூம் (Allan Octavian Hume) பேராயத்தின் |