பக்கம் எண் :

13

 
  (அ) மலர்களோ மோந்தால் வாடும்; விருந்தாளிகளோ சிறிது
முகம் கோணினாலும் வாடிவிடுவார்கள்.
(ஆ) அறிஞர்கள் அடக்கமாக இருப்பார்கள்; மூடர்கள் ஆரவாரம் செய்வார்கள்.
(இ) தாய், மகள் இருவரும் ஒரு பக்கம்; தந்தை மட்டும் இன்னொரு பக்கம்.
 
2.1.4 ஒரு தொகுப்பு ஒன்றுக்கு மேற்பட்ட விவரங்களைக்
கொண்டிருக்கும்போது தொகுப்புகளுக்கு இடையில் (ஒ.நோ. 3.1.2)
 
  (அ) நாளைய விழாவில் பங்கேற்கப் போகிறவர்களின் எண்ணிக்கை
மாவட்டவாரியாக: மதுரை 18; கன்னியாகுமரி 16; செங்கல்பட்டு 9;
கோயம்புத்தூர் 30.
(ஆ) பரிசு பெற்றவர்கள்; ரங்கநாயகி, காட்டுமன்னார்கோயில்;
ரமேஷ்குமார், கோயம்புத்தூர்; கனிமொழி, மருவத்தூர்.
 
3. முக்கால்புள்ளி (:)
   
3.1 முக்கால்புள்ளி இட வேண்டிய இடங்கள்:
   
3.1.1 செய்தியை அறிமுகப்படுத்தும் ‘என்னவென்றால்’ போன்ற சொற்கள்
இல்லாதபோது (ஒ.நோ. 15.1.9)
 
  போகும்போது எல்லோரும் கேட்ட கேள்வி: அடுத்த சந்திப்பு எப்போது?
 
3.1.2 தலைப்புபோல் பொதுவாகக் கூறப்பட்டதற்கும் அதன் விரிவாகக்
கூறப்பட்ட விவரங்களுக்கும் இடையில் (ஒ.நோ. 2.1.4)
 
  இளம் கவிஞர்கள் படிக்க வேண்டியவை: நிறைய நாவல்கள், சிறுகதைகள்,
கொஞ்சம் கவிதைகள்.
 
3.1.3 வரையறையை அல்லது விளக்கத்தை அறிமுகப்படுத்தும் ‘என்பது’,
‘என்றால்’ போன்ற சொற்கள் இல்லாதபோது (ஒ.நோ. 15.1.10)
 
  (அ) சொத்து வரி: முழுச் சொத்து மதிப்பின் மீதான வரி.
(ஆ) பட்டா: நிலம், வீட்டு மனை முதலியவை குறித்த ஆவணம்.
 
3.1.4 கூற்றை அறிமுகப்படுத்தும் ‘கூறியதாவது’ போன்ற சொற்கள்
இல்லாதபோது