2.20அ இடையில், இடையே ‘உடன்’ அல்லது ‘ஓடு’ என்னும் வேற்றுமைப் பொருளில் அல்லது ‘மத்தியில்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும்போது இவற்றைச் சேர்த்து எழுத வேண்டும். (அ) இன்று அவர் நம்மிடையில் இல்லை. (ஆ) ஊர் மக்களிடையே ஒற்றுமை இல்லை. (இ) இதற்கிடையில் வேறு ஒரு சம்பவம் | 2.20ஆ இடையில், இடையே ‘இடைப்பட்டது’ என்பதைக் குறிப்பிடும்போது தனித்தே எழுதப்படுகின்றன. (அ) விரல்களுக்கு இடையில் (ஆ) கூடைகளுக்கு இடையே |
2.21 இருந்து ‘நீக்கம்’, ‘தொடக்கம்’ என்ற பொருளில் (சொல்லுருபாக) பயன்படுத்தும்போது இதைச் சேர்த்து எழுத வேண்டும். (அ) அங்கிருந்து புறப்பட்டோம். (ஆ) அவர்களிடமிருந்து தகவல் வரும். (இ) காலையிலிருந்து வேலை. | |
2.22அ இல்லாமல் ‘மட்டும்’ என்ற சொல்லை அடுத்து வரும்போது சேர்த்தே எழுதப்படுகிறது. (அ) திட்டியதோடு மட்டுமில்லாமல் அடிக்கவும் செய்தான். (ஆ) நேரில் சொன்னதோடு மட்டுமில்லாமல் கடிதமும் எழுதினான். | 2.22ஆ இல்லாமல் பிற சொற்களின் பின் வரும்போது இது இடம்விட்டே எழுதப்படுகிறது. (அ) மழை இல்லாமல் பயிர் வாடுகிறது. (ஆ) நெருப்பு இல்லாமல் புகையாது. (இ) மோர் இல்லாமல் முடியாது. (ஈ) அறை போதிய வெளிச்சம் இல்லாமல் இருக்கிறது. |
2.23அ இல்லை 1. ‘செய்வது’ போன்ற தொழிற்பெயர்களுடன் சேர்த்தே எழுதப்படுகிறது. | 2.23ஆ இல்லை பெயர்ச்சொற்களின் பின் இடம்விட்டு எழுதப்படுகிறது. |