வருவதில்லை கண்டுகொள்வதில்லை | ஆடம்பரம் இல்லை போட்டி இல்லை தேவை இல்லை | 2. ‘செ(ய்)ய’ போன்ற வினையெச்சத்தின் பின் (வகர உடம்படுமெய்யுடன்) சேர்த்து எழுத வேண்டும். வரவில்லை பாடவில்லை கண்டுகொள்ளவில்லை 2.24 இன்றி எல்லா வகைச் சொற்களோடும் சேர்த்தே எழுதப்படுகிறது. (அ) உண்ண உணவின்றி மடிகின்றனர். (ஆ) அவள் சுரத்தின்றிப் பேசினாள். (இ) எப்போதும் பணமின்றித் தவிக்கிறார். 2.25 உடன், உடனே 1. ‘ஓடு’ என்னும் வேற்றுமை உருபுக்கு இணையாக (சொல்லுருபாக) பயன்படுத்தும்போது சேர்த்து எழுத வேண்டும். நானும் உன்னுடன் வருகிறேன். அமைச்சருடன் அதிகாரிகளும் இருந்தனர். 2. ‘செய்த’ போன்ற பெயரெச்சத்தின் பின் சேர்த்து எழுத வேண்டும். வந்தவுடன் பார்த்தவுடனே | | | |
|
|