2.26 உடைய 1. ‘அது’ என்னும் வேற்றுமை உருபுக்கு இணையாக (சொல்லுருபாக) பயன்படுத்தும்போது சேர்த்து எழுத வேண்டும். (அ) ஆசிரியருடைய வீடு (ஆ) மக்களுடைய உரிமைகள் 2. ‘இருக்கிற’, ‘உள்ள’ என்னும் பொருளில் ஒன்றின்/ஒருவரின் தன்மையைக் குறிப்பிடும்போது சேர்த்து எழுத வேண்டும். (அ) மணமுடைய மலர்கள் (ஆ) தகுதியுடைய மாணவர்கள் | |
2.27 அ உண்டு ‘செய்வது’ போன்ற தொழிற்பெயருக்குப் பின் சேர்த்தே எழுதப்படுகிறது. (அ) உன்னைப் பற்றிக் கவலைப்பட்டதுண்டு. (ஆ) அவர் இங்கு வருவதுண்டு. | 2.27ஆ உண்டு ‘இருக்கிறது’ என்ற பொருளில் பெயர்ச்சொற்களை அடுத்து வரும்போது தனித்தே எழுதப்படுகிறது. (அ) அவருக்குக் கிராமத்தில் நிலம் உண்டு. (ஆ) இதனால் பயன் உண்டு. (இ) மனிதனுக்கு மரணம் உண்டு. |
2.28 உரிய ‘கு’ வேற்றுமை உருபு ஏற்ற பெயர்களுடன் சேர்த்து எழுத வேண்டும். (அ) சொத்துக்குரிய மதிப்பு (ஆ) மகிழ்ச்சிக்குரிய செய்தி (இ) நம் இரக்கத்திற்குரிய நபர் | |