பக்கம் எண் :

55

3. தாழ்த்தி மதிப்பிடும் ஒன்றோடு/ஒருவரோடு
வரும்போது இதைச் சேர்த்து எழுத வேண்டும்.

     (அ) இதெல்லாம் ஒரு சாப்பாடா?
     (ஆ) இவனெல்லாம் உருப்படமாட்டான்.
 
  2.36 என்றால்

ஒரு நிபந்தனையை, ஒரு நிலையைக்
குறிப்பிடும்போது அல்லது ஒன்றைத்
தனிமைப்படுத்திக் கூறும்போது இடம்விட்டு
எழுதப்படுகிறது.

     (அ) அவர் வீட்டில் இல்லை என்றால்
     திரும்பி வந்துவிடு.
     (ஆ) மழை பெய்யாது என்றால் மாற்று
     ஏற்பாடு எதற்கு?
     (இ) ஏழை என்றால் இளப்பமா?
2.37 என்று

பின்வரும் இடங்களில் சேர்த்து எழுத
வேண்டும்.

1. ஒலிக்குறிப்புச் சொற்களுடனும் அவை
போன்ற பிற சொற்களுடனும்

     (அ) குருவி கீச்கீச்சென்று கத்திற்று.
     (ஆ) தலை விண்ணென்று வலிக்கிறது.

2. ‘ஒருவருக்காக அல்லது ஒன்றிற்காக’
என்னும் பொருளில் வரும்போது

     (அ) உனக்கென்று வாங்கிய சட்டை
     (ஆ) விருந்தினர் தங்குவதற்கென்று
     கட்டிய விடுதி