5. முதல் சொல்லின் இறுதி எழுத்து உ எடுத்துக்காட்டு | தொடரும் சொல், விகுதி | சந்தி | விளக்கம் | பாக்கு+கசக்கிறது= பாக்குக் கசக்கிறதுகருத்து+கேள்=கருத்துக் கேள் மதிப்பு+தாழ்ந்து=மதிப்புத் தாழ்ந்து சிறப்பு+பெற்று= சிறப்புப் பெற்று ஒரு சுற்று+பெருத்து=ஒரு சுற்றுப் பெருத்து | க,ச,த,ப | மிகலாம் | -க்கு,-ச்சு,-ட்டு,-த்து,-ப்பு,-ற்று என்று முடியும் (வன்தொடர் குற்றியலுகர) பெயர்ச்சொற்களின் பின் ஒற்று மிகலாம்; குறிப்பாக, ‘பு’வில் முடியும் சொற்களின் பின் ஒற்றை மிகுத்து எழுதுவது பரவலாகக் காணப்படுகிறது. | கேட்டு+சொல்=கேட்டுச் சொல் செத்து+பிழை=செத்துப் பிழை விற்று+கொடு=விற்றுக் கொடு | க,ச,த,ப | மிகும் | -ட்டு,-த்து,-ற்று என்று முடியும் வினையெச்சங்களின் பின் ஒற்று மிகும். | அங்கு இங்கு+கண்டேன் எங்கு | க,ச,த,ப | மிகலாம் | ஒற்று மிகுத்து எழுதுவதைத் தவிர்க்கலாம். | கண்டு+திகைத்து=கண்டு திகைத்து வந்து+காத்திரு=வந்து காத்திரு செய்து+பார்=செய்து பார் மென்று+சாப்பிடு= மென்று சாப்பிடு | க,ச,த,ப | மிகாது | -ண்டு,-ந்து,-ய்து,-ன்று என முடியும் வினையெச்சங்களின் பின் ஒற்று மிகாது. | சுடு+சோறு=சுடுசோறு | க,ச,த,ப | மிகாது | கூட்டுச்சொல்லில் முதற்சொல் வினையடியாக இருக்கும்போது ஒற்று மிகாது. | தேக்கு+கள்=தேக்குகள் அச்சு+கள்=அச்சுகள் பண்பு+கள்=பண்புகள் மருந்து+கள்=மருந்துகள் வாய்ப்பு+கள்=வாய்ப்புகள் அம்பு+கள்=அம்புகள் நாற்று+கள்=நாற்றுகள் நோன்பு+கள்=நோன்புகள் | -கள் | ‘க்’ மிகாது | -க்கு,-ச்சு,-ண்பு,-ந்து,-ப்பு,-ம் ,-ற்று,-ன்பு ஆகியவற்றில் முடியும் பெயர்ச்சொற்களின் பின் ‘-கள்’ விகுதி சேரும் போது ஒற்று மிகுவதில்லை. | |