இன் ஆன் ஏது - முயற்சியின் பிறந்தாலான் ஒலி நிலையாது
(இந்தத் தொடர் முறையில் 'இன்' 'ஆன்' ஆகிய இரண்டு உருபுகள்
பயன்படுத்தப்பட்டிருக்கும் தன்மை அறியத்தக்கது; அதனால் இதற்கு
'இன் ஆன் 'ஏது என்று பெயர்.)
இவ்வண்ணம் மூன்றாம் வேற்றுமை குறித்துத் தொல்காப்பியர்
விரிவாக நூற்பா
யாத்திருக்க, நன்னூலார் மிகச் சுருக்கமாகக் குறிப்பிடுகின்றார்.
உருபுகள் : ஆல், ஆன், ஓடு, ஒடு
பொருள் : கருவி, கருத்தா உடன் நிகழ்ச்சி
வாளால் வெட்டினான்
வாளால் வெட்டினான் |
 |
கருவி |
அரசனால் ஆகிய கோயில்
அரசனான் ஆகிய கோயில் |
 |
கருத்தா |
மைந்தனோடு தந்தை வந்தான்
மைந்தனொடு தந்தை வந்தான் |
 |
உடனிகழ்ச்சி |
நன்னூலார் குறிப்பிடும் நான்கு உருபுகளுள் 'ஆல்', 'ஆன்' ஆகியன கருவிப்பொருள்,
வினைமுதற் பொருள் ஆகிய இரண்டிற்கும், 'ஓடு' 'ஒடு' ஆகியன உடனிகிழ்ச்சிப்
பொருளுக்கும் சிறப்பாகப் பயின்றுவரும்.
இப்பொழுது பயிலும் தமிழில் 'ஆல்,'ஆன் ஆகிய உருபுகளுக்குப்
பதிலாக
கொண்டு எனும் சொல்லுருபும்,
வாள்கொண்டு வெட்டினான்
'ஓடு' 'ஒடு' ஆகிய உருபுகளுக்குப் பதிலாக 'உடன்' எனும் சொல்லுருபும்,
தந்தையுடன் மைந்தன் வந்தான்
வழக்கத்திற்குப் புதிதாக வந்துள்ளான்.
மூன்றாம் வேற்றுமையைப் பற்றிய இத்தகு புரிதலுடன்
மூன்றாம்
வேற்றுமைத் தொகையை நோக்குவோம்.
மூன்றாம் வேற்றுமைத் தொகை
தலை வணங்கினான்
> தலையால் வணங்கினான்
தாய் மூவர் >
தாயொடு மூவர்
|
|
|
|