பக்கம் எண் :

தொகைகள்78கி. செம்பியன்

பூரி கிழங்கு

>

பூரியும் கிழங்கும்
- உம்மைத்தொகை
பூரிக்கிழங்கு



>



பூரியை
உடைய கிழங்கு
பூரிக்குக் கிழங்கு
பூரியது கிழங்கு
} வேற்றுமை

  • உம்மைத்தொகையில், வினைத்தொகையில் மிகக்கூடாது
  • 2-ஆம் வேற்றுமைத் தொகையில் மிகக்கூடாது
  • 2-ஆம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் மிகும்
  • 6-ஆம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையாயின் மிகக்கூடாது-
    திருவள்ளுவர் கழகம்
    பாரதியார் படிப்பகம்
    திராவிடர் கழகம்
    சித்தர் காடு
    அஃறிணையாயின் மிகும் -
    குருவிக் கூடு
    யானைத் தலை
    ஊர்ப் புறம்
    தேர்க் கால்
    ஊர்ப் பெயர்
  • பண்புத்தொகையில் மிகும் -
    முழுப்பக்கம்
    பத்துப்பாட்டு
  • 3-ஆம், 4-ஆம், 5-ஆம், 7-ஆம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க
    தொகைகளில் மிகும்.