கற்றான் - கல்+ற்+ஆன்-
ஓடின - ஓடு + இன் +அ-
போனது - போ+ன்+அ+து-
போயது - போ+ய்+அ+து- |
ற்-
இன்-
ன்-
ய்- |
இறந்தகால இடைநிலை
இறந்தகால இடைநிலை
இறந்தகால இடைநிலை
இறந்தகால இடைநிலை |
நிகழ்கால இடைநிலைகள் (Sings of Present Tense)
கிறு, கின்று, ஆநின்று.
செய்கிறான-
செய்கின்றார்-
செய்யாநின்றார்- |
செய்+கிறு+ஆன்-
செய்+கின்று+ஆர்-
செய்+ஆநின்று+ஆர்+ஆ |
கிறு-
கின்று-
நின்று- |
நிகழ்கால இடைநிலை
நிகழ்கால இடைநிலை
நிகழ்கால இடைநிலை |
எதிர்கால இடைநிலைகள்
(Signs of Future Tense)
ப், வ், க்
நடப்பேன் -
செய்வேன் -
பாடுகம் - |
நட+ப்+ஏன் -
செய்+வ்+ஏன்-
பாடு+க்+அம்- |
ப் -
வ் -
க் - |
எதிர்கால இடைநிலை
எதிர்கால இடைநிலை
எதிர்கால இடைநிலை |
தொல்காப்பியச் சொல்லதிகாரத்தின் 202-ஆம் நூற்பாவின்
உரையில் சேனாவரையர், ‘எதிர்காலத்திற்குக் ககர ஒற்றுப் பெறுதலும்
கொள்க’ என்று கூறுவது காண்க.
சாரியை (Euphonic Particles)
சாரியை என்பது சார்ந்து இயைந்து நிற்பது. இது காதுக்கு
இனிமை தருவதற்கு வருவது.
அன், இன், ன், அ, கு, அற்று, அத்து முதலியவை பொதுச்
சாரியைகளாகவும், அ, கரம், காரம், கான் என்பவை எழுத்துகளுக்குச்
சாரியைகளாகவும் வரும்.
|