|
இத்துணைத் தமிழ்க் கவிஞர்களும்
மொழியறிஞர்களும் தமிழ்
கற்ற ஐரோப்பிய அறிஞர் பெருமக்களும் தமிழ் மொழியின்
இனிமையையும் தனித்தன்மையையும், அதன் இலக்கியச் சிறப்பினையும்
நலம் மிக்க சொல் வளத்தினையும் அரிய வன்மையையும்
மிகுந்த
தொன்மையையும் எடுத்துக் கூறியிருப்பதைக் காணும்போது,
தண்டமிழ் மொழியின் உண்மைத் தன்மையை நன்கு
உணரலாம். கூறியவையனைத்தும் உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை.
தமிழின் தனிப் பண்புகள்
இத்தகைய தொன்மையும்
சிறப்பும் கொண்டதாயினும் தமிழ்மொழி,
காலத்துக்கு ஏற்றவாறு மாறி வளரும் தனிச் சிறப்புமுடையது.
முன்னைப் பழமைக்குப் பழமையாயும் பின்னைப் புதுமைக்குப்
புதுமையாயும் இலங்குவது தமிழ் மொழிக்குள்ள தனிச்சிறப்பாகும்.
இன்றியமையாத அயல்மொழி்ச்
சொற்களைத் தமிழில் ஏற்றுக்
கொள்ளவும் நம் முன்னோர்கள் திசைச் சொல் என்று ஒரு பாகுபாடும்
வகுத்து வைத்தார்கள். இதுவும் தமிழுக்குள்ளதொரு
தனிச் சிறப்பாகும்.
மொழி நிலையைப் பொதுவாக மூன்று வகைப்படுத்தலாம்.
அவை தனிநிலை, உட்பிணைப்பு நிலை, ஒட்டு நிலை என்பவை.
சொற்கள் ஒன்றோடு ஒன்று
ஒட்டாமல் தனித்தனியே நின்று
வாக்கியங்களாக அமைந்து பொருளுணர்த்தும் நிலையுள்ள மொழி
தனிநிலை மொழி எனப்படும். சீனமொழி இவ்வாறு இருக்கிறதாம்.
சயாம் மொழி, பர்மிய மொழி, திபெத்திய மொழி, ஆகியவையும்
இவ்வகையைச் சேர்ந்தவையே.
அடிச்சொல் இரண்டு சேரும்போது இரண்டும் சிதைந்து
ஒன்றுபட்டு நிற்கும் நிலையையுடைய மொழியை உட்பிணைப்பு நிலை
மொழி என்பர். ஐரோப்பிய மொழிகள் பலவும்
வடமொழியும்
இவ்வகையைச் சேர்ந்தனவாம். ஆங்கில மொழியில்
|