முடியாத நிலை இன்று வந்துவிட்டது. ஆதலால், எல்லாரும்
வழுவின்றி
நல்ல தமிழ் எழுத எளிதான வழிகளைத் தெரிந்து கொள்ள
வேண்டும்.
வழுவின்றி நல்ல தமிழ் எழுத எளிதான வழிகள் உண்டு.
நன்னூலையோ தொல்காப்பியத்தையோ உருப்போட வேண்டும்
என்பதில்லை. தன்னம்பிக்கையோடும் உண்மையான
நோக்கத்தோடும்
இந்நூலைப் பயின்றால் சில நாள்களில் - இல்லாவிட்டால் - சில
வாரங்களில் எவருக்கும் நல்ல தமிழ் எழுதும் திறமை - வழுவின்றி
எழுதும் அறிவு - எளிதாக உண்டாகும் என்பதில் ஒரு சிறிதும்
ஐயமில்லை. முயற்சி மட்டும் வேண்டும். முயற்சி
செய்யுங்கள்!
முயன்று பார்த்தால் முடியாதது உண்டோ?
|
|
|