|
இவற்றை நன்றாகத் தெரிந்து கொண்டால் பல பிழைகளை
நீக்கலாம்.
தமிழறிஞர்கள் எழுதியுள்ள உரைநடை நூல்களைப்
படிக்கும்போது, வல்லெழுத்து மிகும் இடங்களைக் கவனித்துப்
படித்து வந்தால், பிழையின்றி எழுத நன்கு தெரிந்து கொள்ளலாம்.
எதிரில் இருக்கும் பக்கம் என்னும் பொருளில் எழுதினால்
எதிர்ப்பக்கம் என்றெழுதுக.
எதிர்கட்சி - இத்தொடரை வினைத்தொகையாகக் கொண்டால்
எதிர்கட்சி என்று வலி மிகாமல் எழுதுக. (எதிர்த்த கட்சி, எதிர்க்கிற
கட்சி, எதிர்க்கும் கட்சி.)
நாளிதழாசிரியர்களும் எழுத்தாளர்களும் வல்லெழுத்து மிகாமல்
எழுதும் தவறுகளை ஒழித்துக் கூடிய மட்டும் பிழையற்ற தமிழில்
செய்திகளை எழுதுவது அமிழ்தினும் இனிய தமிழ் மொழிக்கும்
தமிழகத்திற்கும் தமிழ் மக்களுக்கும் செய்யும் நல்ல தொண்டாகும்.
எதிர்காலச் சந்ததியார் அவர்களைப் புகழ்ந்து பாராட்டுவர்.
|