பக்கம் எண் :

சில சந்தி முறைகள் 257


20.
சில சந்தி முறைகள்

தமிழில் பிழையற எழுதுவதற்கும், அருந்தமிழ்ப் பாடல்களை
வருந்தாமல் படித்து இன்புறுதற்கும் சில சந்தி முறைகளை நன்கறிந்து
கொள்வது இன்றியமையாதது.

முன்னூறு, கண்டாப்போல், உய்த்துணரர்ப்பாலது, விடியர்க்காலம்,
முதநூல், முந்நிலைமை, நந்நடத்தை, நற்தாள், வந்தால்ப் போல்,
கொடுத்தால்ச் சொல், முந்நாளில், வாநிலை, மேநாடு என்பன
போன்ற பிழைகளைச் சில வெளியீடுகளிலும் நாளிதழ்களிலும் காண்கிறோம்.
இத் தவறுகளை ஒழிக்க வழி இங்குக் கூறப்படும் சந்தி முறைகளைத்
தெரிந்து கொள்வதுதான் என்றறிக.

முன்னே குறிப்பிடப்பட்ட பிழைகளுக்கு உரிய திருத்தங்களைக்
கீழே காண்க.

மும்மை + நூறு =
கண்டால் + போல் =
உய்த்துணரல் + பாலது =
விடியல் + காலம் =
முதல் + நூல் =
முன் + நிலைமை =
நல் + நடத்தை =
நல் + தாள் =
வந்தால் + போல் =
கொடுத்தால் + சொல் =
முன் + நாளில் =
வான் + நிலை =
மேல் + நாடு =
முந்நூறு.
கண்டாற்போல்.
உய்த்துணரற்பாலது.
விடியற்காலம்.
முதனூல்.
முன்னிலைமை.
நன்னடத்தை.
நற்றாள்.
வந்தாற்போல்.
கொடுத்தாற்சொல்.
முன்னாளில்.
வானிலை.
மேனாடு.