25.
தேடி வைத்த செல்வம்
வாக்கியம் வழுக்களும் திருத்தங்களும்
தமிழ் நாளிதழ்களைப் படித்த போது விடைத்தாள்களைத்
திருத்திய காலத்தும் வேற நூல்களைப் படித்த நேரத்திலும் கண்ட
வழுக்களைப் பலருக்கும் பயன்படும் பொருட்டுப் பல்லாண்டுகளாய்ச்
சேர்த்து வைத்ததே இவ்வரிய செல்வம். இப்படித் தேடி வைத்த
செல்வத்தைக் கொண்டு தமிழன்னைக்குத் திருத்தமான தமிழணிகளை
அணிவிக்கலாம். இப்பகுதியில் வாக்கியங்களில் காணக்கிடைக்கும்
68 வகை வழுக்களை எடுத்துக் காட்டியிருப்பதோடு அவற்றிற்குரிய
திருத்தங்களையும், அத்திருத்தங்களுக்குக் காரணங்களையும்
கூறியிருக்கக் காணலாம். அவை இவை:
1. அத்துணிச்சல் நமக்கு வழி காண்பிப்பவனாய் எதிர்காலத்தில்
எல்லாச் சிறப்புக்குக் காரணமாகி முடிவில் நன்மையளிக்கின்றது.
அத்துணிச்சல் நமக்கு வழிகாட்டியாய், எதிர்காலத்தில் எல்லாச்
சிறப்புக்கும் காரணமாகி நன்மையளிக்கும்.
துணிச்சல் என்பதற்கு ஏற்ப வழிகாட்டி என்று வர வேண்டும்.
‘எல்லாச் சிறப்புக்கு’ என்னும் தொடர் முற்றும்மை பெறவேண்டும்.
எதிர்காலம் என்று இருப்பதற்கு ஏற்ப அளிக்கும் என்று எதிர்கால
வினைமுற்றே வரவேண்டும்.
2. அந்த ஊரைச் சற்றிப் பார்ப்பதற்கு எப்பொழுதும் ஒரு
பச்சைப்பாய் விரித்தாற் போலிக்கிறது.
இருக்கிறது என்னும் பயனிலைக்கு இங்கே ஊர் என்பதே தக்க
எழுவாயாதலால், ஊர் என்பதை இரண்டாம் வேற்றுமையாய்
|