பக்கம் எண் :

மாற்றும் வழிகள் 345


அவர் வறுமையைப் போக்க வழிதேட வேண்டும் என்றும் கூறினாள்.

* * *

நேர்க்கூற்று

"இன்று இங்குத் தங்கி நாளைக்கு இராமரிடம் போவேன்"
என்று பரதன் குகனிடம் கூறினான்.

அயற்கூற்று

அன்று அங்குத் தங்கி மறுநாளைக்கு இராமரிடம் செல்வதாய்ப்
பரதன் குகனிடம் கூறினான்.

* * *

நேர்க்கூற்று

"இன்று போய்ப் போர்க்கு நாளை வா" என்று இராமர்
இராவணனுக்கு உரைத்தார்.

அயற்கூற்று

அன்று போய் மறு நாளைக்குப் போர்க்கு வருமாறு இராமா
இராவணனுக்கு உரைத்தார்.

* * *

நேர்க்கூற்று

நாணன், "திண்ணா, நான் திரும்பிவரும் வரைக்கும் இங்கே
நின்றுகொண்டிரு" என்று சொல்லிச் சென்றான்.

அயற்கூற்று

நாணன் திண்ணனைத் தான் திரும்பி வரும் வரைக்கும்
அங்கே நின்று கொண்டிருக்குமாறு வேண்டிக்கொண்டு சென்றான்.