பக்கம் எண் :

நிறுத்தக் குறிகள் 361


புள்ளியிடுக. ஆயினும், எனினும், என்றாலும் என்பன போன்ற
வேறுபாட்டு இடைச் சொற்களுக்குப் பின்னும் காற்புள்ளியிடுக.
(காரணக்கிளவி - காரணத்தைக் குறிக்கும் சொல். கிளவி - சொல்.
அதனால், இதனால், என்னும் சொற்களைச் சுட்டு முதலாகிய காரணக்
கிளவிகள் என்பர் தொல்காப்பியர்.)

1. அழுகிப் போன பண்டங்களை உள்ளே போட நம் வயிறு
குப்பைத் தொட்டி அன்று. அதனால், நாம் நல்ல பண்டங்களையே
தின்ன வேண்டும்.

2. செய்யுள் படிப்பதற்குச் சிறிது கடினமாகவே இருக்கிறது. எனினும்,
அது நமக்குத் தனிமையில் இனிமை தருகிறது. ஆதலால், நாம்
செய்யுள்களைப் படித்து இன்புறப் பழக வேண்டும்.

4. விளிகளுக்குப் பின் காற்புள்ளியிடுக.

1. இளமாணவர்களே, சாதி வேற்றுமை முதலியவை ஒழியப்
பாடு படுங்கள்.

2. கடவுளே, கருணை செய்தருள்க.

3. ஐயா, பெரியீர், அம்மையீர். (கடிதத்தின் முற்கூற்று விளியில்)

5. முகவரியில் குறிக்கும் பெயர், ஒவ்வொரு பட்டம், வீட்டு எண்.
தெரு இவற்றின் பின் காற்புள்ளியிடுக.

1. டாக்டர் இரத்தினவேல் சுப்பிரமணியம்,
பி.எஸ்சி., எம்,டி., எப்.ஆர்.சி.பி. (லண்டன்),
23, பால்பர் சாலை,
கீழ்ப்பாக்கம்,
சென்னை - 600 010.