பக்கம் எண் :

378நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


30.
கட்டுரை எழுதுதல்

நாட்டில் நல்லறிவைப் பரப்புவதற்குக் கட்டுரைகள் பெரிதும்
பயன்படுகின்றன. அறிஞர்கள் இன்று நாளிதழ்களிலும் ஞாயிறு மலர்களிலும்
வார மாத வெளியீடுகளிலும் கட்டுரைகள் எழுதிவரக் காண்கிறோம்.
மக்கள் கட்டுரைகளைப் படித்து வருகிறார்கள். நூல்களைப் படிப்பதைவிட
இன்று பலரும் கட்டுரைகளைப் படித்து அறிவைப் பெருக்கி வருவதைப்
பார்க்கிறோம். எனவே, எழுத்தாளர்கள் கட்டுரை எழுதும் முறையில்
கவனம் செலுத்த வேண்டும்.

கட்டுரை எழுதுவது எளிதன்று. மொழியறிவும் பொருளறிவும்
இருந்தாலன்றி ஒருவர் கட்டுரை எழுதுவது கடினம். கட்டுரை
எழுதுவதற்கு மிகுந்த பயிற்சியும் வேண்டும்; ஓரளவு மொழி நடையும்
வேண்டும். இலக்கண அறிவு இல்லாதவர்கள் கட்டுரை எழுதினால்
அது மதிப்பற்ற வெற்றுரையேயாகும். இக்காலத்தில் கட்டுரை
படிப்பவர்கள் அறிஞர்கள்; கலைஞர்கள்; அறிவைப் பெருக்க
விரும்புகிறவர்கள்; புதுமை காணக் கருதுகிறவர்கள். அவர்கள்
தங்கள், படிக்குங் கட்டுரைகளில் அறிவு காண விரும்புகிறார்கள்.
அவர்கள் தாங்கள் கருதிய கருத்துகள் அவற்றில் இருந்தால் கண்டு
மகிழ்ந்து படிப்பார்கள்; இல்லாவிட்டால் மதிக்காது புறக்கணிப்பார்கள்.
ஆதலால், எழுத்தாளர்கள் நல்ல முறையில் கருத்துக் கோவையுடன்
திறம்படக் கட்டுரைகள் எழுத வேண்டும். பழைய சரக்குகளை விற்பனை
செய்யச் சிலர் முயற்சி செய்வதுண்டு. பழைய சரக்குகளுக்கு இப்போது
மதிப்பில்லை. பிழை மலிய எழுதும் கட்டுரையாளர்களையும் மக்கள்
இன்று மதிப்பதில்லை. ஆதலால், எழுத்தாளர்கள் எழுத்துப் பிழை,
சொற்பிழை, சொற்பிரிப்புப் பிழை, வாக்கியப் பிழை,