பக்கம் எண் :

உரைநடையில் கவனிக்க வேண்டுவன 391


32.
உரைநடையில்
கவனிக்க வேண்டுவன

வாக்கிய அமைப்புகளும் பிழை நீக்கமும் பத்தியமைப்பும்
குறியீடுகளும் தெரிந்து கொண்டால் மட்டும் இனிய உரைநடை
எழுதுவது இயலாது. அழகிய இனிய நடையில் எழுதப்பட்டுள்ள
நல்ல தமிழ் உரை நடை நூல்களைப் படிக்க வேண்டும். இனிய
உரைநடை எழுதுவதற்கு அதுதான் பேருதவியாயிருக்கும்.

உரைநடை எளிதாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும்.
உரைநடையில் தெளிவே முதன்மையானது. இங்கொன்றும்
அங்கொன்றுமாகக் கடினமான சொற்களைப் பெய்து எழுதுவதால்
உரைநடை உயர்ந்து விடாது. அப்படி எழுதுவது பொத்தல்
நடையாகும். இக்காலத்தில் விளங்காத முறையில் எழுதுவதைச்
சிறந்ததாக அறிவுடையோர் ஒப்புக் கொள்வதில்லை. விளங்கும் எளிய
நடையே உரை நடைக்கு அழகு.

சொற்கள்: உரைநடையில் கடினமான சொற்களைப் பயனில்லாமல்
திணிப்பது கூடாது. ‘சென்றேன்’ என்பதற்குப் ‘படர்ந்தேன்’ என்று
எழுதுவது நன்றாயிராது. ‘நான் ஒரு எருதைப் பார்த்தேன்’ என்று
எழுதாமல் ‘எனக்கு மகிஷம் தரிசனமாயிற்று’ என்று எழுதுவத
நகைப்பைத்தான் விளைவிக்கும் ‘துணியைத் துவைத்தீரா?’ என்று
எழுதாமல் ‘கலையைச் சிலையிற் கலையாமல் தோயத்தில்
தோய்த்துத் துவைத்தீரா?’ என்று எழுதுவதும் வேடிக்கையாகவே
இருக்கும்.

வீணாக ஆங்கிலச் சொற்ளையும் வடமொழிச் சொற்களையும்
பெய்து எழுதுவது தவறு. ரோட், டிரைவர் என்பன போன்ற
ஆங்கிலச் சொற்களையும் ஜலம், சாதம் போன்ற