பக்கம் எண் :

474நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

பிற்சேர்க்கை - 1

சில காரணப் பெயர்களின்
வரிசை

இடுகுறிப்பெயர் என்றும் காரணப்பெயர் என்றும் இருவகைப்
பெயர்கள் உண்டு. வண்ணான் துணிகளுக்கு இடும்குறிபோலக்
காரணம் தெரியாமல் உள்ள பெயர் இடுகுறிப்பெயர். காரணத்தோடு
கூடிய பெயர் காரணப் பெயர். தொல்காப்பியர் ‘எல்லாச் சொல்லும்
பொருள் குறித்தனவே’ என்று கூறியிருந்தாலும் பலவற்றிற்குக்
காரணம் தெரிவதில்லை. பரந்த அறிவைப் பொறுத்தது சொல்லுக்குக்
காரணம் கண்டுபிடிப்பது. இங்கு ஒரு சில காரணப் பெயர்களே
கூறப்பட்டுள்ளன.

அடுப்பு - அடுதலுக்கு (சமைத்தலுக்கு) உரியது.
அண்ணன் - குடும்பத்தில் தலைமை நிலை எய்தும்
பெருமைக்கு உரியவன். (அண்ணல்-பெருமை)
அமக்களம் - அமர்க்களம் என்னும் சொல்லின் சிதைவு.
அமர்க்களம் - போர் நடக்கும் இடத்தில் காணப்படும் அடி,
குத்து, பேரோசை போல இருப்பது.
அரவணைத்தல் -
(அரவு+
அணைத்தல்)
பாம்புகள் ஒன்றோடு ஒன்று தழுவிக்
கொண்டு அணைத்து இன்புறுமாம்.
அதனால் அரவணைத்தல் என்னும் தொடர்
அன்புடன் தழுவி வாழ்தலுக்குக்
கூறப்படுகிறது.