|
பனை -
|
பன்னுதல் - சிறப்பித்துச் சொல்லப்படும் தன்மை
வாய்ந்தது. பனஞ்சாறு குடிக்கவும் பனங்கற்கண்டு.
பனை வெல்லம் செய்யவும் பயன்படுகிறது. பசிக்குப்
பனம் பழம் உதவும். பனங்காயிலிருந்து நுங்கு
எடுத்துத் தின்னலாம். பனையோலையால் குடிசை
வேயலாம். பனை மரத்தை வெட்டி ஒரு துண்டை நீர்
பாய்ச்சப் பயன்படுத்தலாம். பனந்துண்டுகளை
அறுத்தக் கூரை போடப் பயன்படுத்தலாம். பல
ஆண்டுகள் மழை பொய்த்தாலும் பனைமரம் காய்ந்து
போகாது. இவ்வாறு பயன்படுவதால் தென் பாண்டி
நாட்டில் பனையைத் தெய்வத்தன்மை வாய்ந்த கற்பக
விருட்சம் போலச் சிறப்பாகப் பாராட்டப்படுகிறது. பல
சிறப்புகளைப் பன்னு வதற்குரியது பனை எனப்
பட்டது.
|
|
பாளையம் -
|
படை. படை தங்கியிருந்த இடம் பாளையம்
எனப்பட்டது. உ-ம் பெரியபாளையம். பகைவர்களது
படையெடுப்பைத் தடுப்பதற்கு ஆங்காங்கே படைகள்
வைக்கப்பட்டிருந்தன. அவ்விடங்கள் பாளையம்
எனப்பட்டன. விஜயநகரப் பேரரசர் காலத்தில் தமிழ்
நாட்டில் இப்பாளையங்கள் ஏற்பட்டன.
|
|
பாணன் -
|
பண் இசைத்துப் பாடுபவன்.
|
|
புடைவை -
|
புடை - பக்கம். பக்கத்தில் கொய்சகம் வைத்துக்
கட்டுவது. புடைவை என மருவி வழங்குகிறது.
|
|
புடலங்காய் -
|
துவாரமுடைய காய். புழல் - துவாரம். ழகரம்
டகரமாயிற்று.
|