பக்கம் எண் :

தமிழ் மொழி 5


தோன்றினமை பிரசித்தம். ஆனால், தமிழ் மொழியின் ஆதி
இலக்கியங்களோ இப்போது அறுதியிட்டிருக்கின்றபடி கிறிஸ்துவ
சகாப்தத்தின் ஆரம்ப காலத்திலே தோன்றியனவாகும். இங்கே ஆதி
இலக்கியங்கள் என்றது இப்போது அகப்படுவனவற்றுள் காலத்தால்
முற்பட்டனவற்றையே ஆகும். இவ்விலக்கியங்களின் திருந்திய
வடிவங்களையும் செய்யுள் அழகுகளையும் முதிர்ந்த பக்குவத்தையும்
நோக்குமிடத்து, கிறிஸ்துவ சகாப்தத்துக்கு மிக மிக முற்பட்ட காலத்தே
தமிழிலக்கியங்கள் உருப்பெறத் தொடங்கியிருத்தல் வேண்டுமென்று எளிதில்
ஊகித்தல் கூடும்.

இத்தொன்மை பற்றித் தமிழ் மக்களாகிய நாம் அனைவரும்
பெருமை மேற்கொள்ளுதல் இயல்பே. இதனினும் மிக்கதொரு
சிறப்பு நமது மொழிக்கு உள்ளது. திராவிட வகுப்பில் பிற மொழிக்கு
உரிய ஆதி இலக்கியங்களெல்லாம் வடமொழி நூல்களின் வழிவந்தனவாம்.
உதாரணமாக, தெலுங்கு நூல்களுள் காலத்தால் முந்திய நன்னைய பாரதம்
என்னும் நூல் வடமொழியிலுள்ள வியாச பாரதத்தைப் பின்பற்றியது.
தமிழிலக்கியங்களுள் காலத்தால் முந்திய நூல்கள் இப்பெற்றியன அல்ல
என்று குறிப்பிட்டுள்ளார்.

திராவிடத் தாய்மொழி தமிழே

இந்திய மொழிகளைத் திராவிட இனம் எனவும், ஆரிய இனம்
எனவும், ஆரியத் திராவிட இனம் எனுவும் பிரிப்பர் இக்கால மொழி
நூலறிஞர். திராவிட இனத்தைச் சேர்ந்த மொழிகளே தமிழ், கன்னடம்,
தெலுங்கு, மலையாளம், குடகு, துளு ஆகிய திருந்திய மொழிகளும்,
துதம், கோதம், கோண்டு, கூ, ஓரியன், இராசமகால் முதலிய திருந்தாத
மொழிகளுமாகும்.

இலக்கிய வளமில்லாத திராவிட மொழிகள் வட திராவிட மொழிகள்,
மத்திய திராவிட மொழிகள், தென் திராவிட மொழிகள் என
வகைப்படுத்தப்படுகின்றன. பிராகுய், கூர்க், மால்ரோ என்பவை வட
திராவிட மொழிகளாகும். கொலமி - நாய்கி, பார்ஜி,