பக்கம் எண் :

வினையியல் 97

உண்ணாமல் போனான்

உண்ணாமல் என்பது எதிர்மறை வினையெச்சம். மல் என்பது
எதிர்மறை வினையெச்ச விகுதி.

உண்ணாமே கொடுத்தான்

உண்ணாமே என்பது எதிர்மறை வினையெச்சம். மே என்பது
எதிர்மறை வினையெச்ச விகுதி.

இங்கே கூறிய வினையெச்சங்கள் எல்லாம் தெரிநிலை
வினையெச்சங்களே.

குறிப்பு வினையெச்சம்

காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் வினையைக் கொண்டு
முடியும் எச்சம் குறிப்பு வினையெச்சமாகும்.

மெல்லப் பேசினான் -
இனிது பேசினாய் -
மெல்ல என்பது குறிப்பு
வினையெச்சம்.
இனிது என்பது குறிப்பு வினையெச்சம்

வினையெச்சங்கள் பயன்படும் விதங்கள்

இவ்வினையெச்சங்கள் வினைமுற்றுக்கு முன் நடந்த
நிகழ்ச்சிகளை காட்டுவதாயும், ஒரே காலத்தில் நிகழ்வதைக்
குறிப்பிடுவதாயும், காரணம் காட்டுவதாயும், காரியப்
பொருட்டதாயும், நிபந்தனையைக் குறிப்பதாயும் வரும்.

1. நடந்து சென்றான்.
சாப்பிட்டுப் போனான்.
எழுதிப் படித்தான்.
உறங்கி எழுந்து பல் விளக்கிச் சாப்பிட்டுச் சென்றான்.

இவ்வினையெச்சங்ககள் வினைமுற்றுக்கு முன் நிகழந்தவற்றைக்
காட்டுகின்றன.