|
AS
AS. cote, cyte,
OE, E., cot, Ice., MDu., ON. kot, ML G. kot, kote, koth,
E. cot, Skt.
kuti.
குடி - குடிகை - குடிசை =
கூலிக்காரர் வாழும் சிறு கூரைவீடு.
E.
cottage.
குடி - குடில் = 1. ஆட்டுக்குட்டிகளை
யடைக்கும் வட்டமான கூடு.
2. சிறு குடிசை.
Skt. kutira (குடீர).
குடில் - குடிலம் = வளைவு.
Skt. kut@ila
குல் - கொல் - கோல்
= உருண்டு நீண்ட கம்பு.
கோல் - கோலி = சிறு
விளையாட்டுக் குண்டு. மரா. கோலீ (goli).
குள் - கொள் - கொடு =
வளைந்த. கொடுங்கோல் = வளைந்த கோல்.
கொடு - கொடுக்கு =
வளைந்த உறுப்பு, கொட்டும் முள்.
Ice. krokr,
Sw. krok, Dan. krog, D. cruk, W. crwg, Gael.
crocan, OF. crok, E.
crook.
ட - ர. ஒ. நோ; படவர்
- பரவர், முகடி - முகரி.
குடகு -
Coorg, தரங்கம்பாடி
- Tranquebar.
கொள் - கொள்ளு - கொட்கு
- கொட்கு - கொக்கி.
AS. hoc, hooc,
D. hock, Ice. haki, Ger. haken, OHG. hako, L.G.
hakc, E. hook.
கொள் - கோள் -
கோளம் = உருண்டை. Skt.
gola (கோல).
கோள் - கோண் - கோணம்.
Gk. gonia, E. penta gon.
கோண் - கோடு - கோட்டம்
= 1. வளைவு. 2. மதில் சூழ்ந்த கோவில், மதில்
சூழ்ந்த சிறைச்சாலை.
Skt. kostha (கோஷ்ட).
கோட்டம் - கோட்டை =
1. நிலாவைச் சூழும் வட்டக்கோடு, 2. மதில் சூழ்ந்த
அரண்மனை அல்லது நகர், வ.
(Skt.)
கோட்ட. L.
castrum.
இவற்றை ஒரு பானைச்
சில் பருக்கைப் பதம் போலக் கொள்க. இங்ஙனம் ஏராளமான தமிழ்ச்சொற்கள் ஆரியச்
சொற்களோடு ஒலியும் பொருளும் ஒத்திருப்பது, கொடிவழித் தொடர்பினாலன்றித் தற்செயலாக
இருக்க முடியாது.
4. தூய்மை
உலக மொழிகளுள், தூய்மையை
வேண்டுவதும், அதைக் காத்துக் கொள்ள வல்லதும் தமிழ் ஒன்றே. இதன் விளக்கத்தை ‘வளம்’ என்னும்
சிறுதலைப்பின்கீழ்க் காண்க.
5. செம்மை
தமிழர் பேரினமாய்ப் பெருகிப் பெருநிலத்திற் பரவியபின், சொற்களின் வடிவு பொதுமக்கள்
வாயில் இடந்தோறும் வேறுபடுவதையும்,
|