12
12
"கடிசொலில்லை காலத்துப் படினே"
“கடிசொ லில்லை காலத்துப் படினே”
(எச்ச. 56)
என்பது ஒரு தொல்காப்பியச் சூத்திரம்.
இதற்குச் சேனாவரையர் உரை வருமாறு:
"இதன் பொருள்: இவை தொன்றுதொட்டன
வல்லனவென்று கடியப் படுஞ் சொல்லில்லை; அவ்வக் காலத்துத் தோன்றி வழங்கப்படு மாயின் என்றவாறு.
உதாரணம்: சம்பு, சள்ளை, சட்டி,
சமழ்ப்பு என வரும். இவை தொன்றுதொட்டு வந்தனவாயின், முதலாகாதனவற்றின்கண்
"சகரக் கிளவியு மவற்றோ ரற்றே
அ
ஐ ஒளவெனு மூன்றலங் கடையே"
(தொல்.
எழுத்து. 62)
என விலக்கார் ஆசிரியர்; அதனான்
அவை பிற்காலத்துத் தோன்றிய சொல்லேயாமென்பது.
இஃது எழுவகை வழுவமைதியுள் ஒன்றாகாது
ஓர் பாதுகாவலாதலிற் கிளவியாக்கத் தியைபின்மையான் ஈண்டுக் கூறினாரென்பது.
இனி ஒரு சாராருரை: இன்ன அநுவதிக்குங்
காலமா மக்காலத்து, அவை வழுவன்மை எல்லா ஆசிரியர்க்கும் உடம்பாடாகலின், அதனைத் தழுவிக்கொண்டவாறென்க.
இவை யிரண்டும் இச் சூத்திரத்துக்குப் பொருளாகக் கொள்க.
இனி ஒன்றென முடித்தலாற் புதியன தோன்றினாற்
போலப் பழையன கெடுவனவும் உளவெனக் கொள்க. அவை அழான் புழான் முதலியனவும், எழுத்திற் புணர்ந்த
சொற்கள் இக்காலத்து வழங்காதனவுமாம்."
தன்னுரையும் மன்னுரையுமாகச் சேனாவரையர்
கூறிய ஈருரைகளுள், முன்னுரையே சூத்திரத்திற்குப் பொருந்திய உண்மையுரையாம்.
சம்பு சள்ளை சட்டி
சமழ்ப்பு என்னுஞ் சொற்கள், தொல்காப்பியராற் கொள்ளப்படாவிடினும் அல்லது தொல்காப்பியர்
காலத்து வழங்கவே யில்லை யென்று (ஒருசாரார் கொள்கைப்படி) கொள்ளினும், அவை தூய தென்சொற்கள்
என்பதை எவரும் மறுக்கமுடியாது.
|