பக்கம் எண் :

தமிழர் மதம் 137

New Page 1

தென்மொழிக்கும் வடமொழிக்கும் வேறுபாடு

  தென்மொழி வடமொழி
     
   (1) அயன் மொழி திரிமொழி
     
   (2) மெல்லோசை மொழி வல்லோசை மொழி
     
   (3) உலக முதன் மொழி
(இந்தைரோப்பிய
மொழிக் குடும்பத்தின்
தொடக்க முனை).
மேலை யாரியத்தின் பின்
தோன்றிய மொழி
(இந்தைரோப்பிய மொழிக்
குடும்பத்தின் இறுதிமுனை).
     
   (4) தூய ஓரினத் தாய்மொழி ஈரினக் கலவை மொழி
     
   (5) குமரிநாட்டு மொழி தனக்கென ஓர் இடமில்லாத
நாடோடி மொழி
     
   (6) கலையும் அறிவியலும்
பற்றிய முதலிலக்கிய
மொழி
அறிவியலும் பற்றிய கலையும்
வழியிலக்கிய மொழி
 
     
   (7) உள்ளது சொல்லும்
மெய்ந்நூன் மொழி
இல்லது சொல்லி ஏமாற்றும்
பொய்ந்நூன் மொழி
     
   (8) கடவுள் வழிபாட்டுமொழி சிறுதெய்வக் கொலைவேள்வி
மொழி
      
   (9) இயற்கைப் பான்மொழி செயற்கைப் பான்மொழி
     
   (10) செம்மை வரம்பு மொழி செம்மை வரம்பிலா மொழி
      
   (11) பொருளிலக்கணம்
மொழி
பொருளிலக்கணம் இல்லா
உள்ள மொழி
     
   (12) மன்பதை முழுவதையும்
ஒன்றுபடுத்தும் மொழி
ஓரினத்தையே நாற்பிறவிக் குல
மாகப் பிரிக்கும் மொழி
     
   (13) பேச்சு மொழி இலக்கிய மொழி
     
   (14) மக்கள் மொழியென்று
ஒப்பு மொழி
தேவமொழி யென்று ஏமாற்று
மொழி

தேவமொழியின் இயல்புகள்

    தொன்மை, முன்மை, இயன்மை, வியன்மை, தாய்மை, தூய்மை, எண்மை, ஒண்மை, இளமை, வளமை, அம்மை, செம்மை, இனிமை, தனிமை, மறைமை, இறைமை என்னும் பதினாறும் தேவமொழிக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத பண்புகளாம்.