க
கிழக்கும் தெற்குமாக, வட்டம்
சதுரம் முக்கோணம் ஆகிய வடிவு களில் வைக்கப்படும், காருகபத்தியம் ஆகவனீயம் தக்கிணாக் கினியம்
என்னும் முத்தீ வடிவு கொள்வன். செல்வத்திற்குக் கரணி யன்; இல்லறத்திற்கு நல்ல தலைவன்;
அரக்கரையழிக்கச் சிறந்த துணைவன்; வேள்விப் படைப்புகளை யெல்லாம் தேவரிடம் சேர்ப்பதால்,
தேவர் தூதன்; இறந்தவரை நல்லுலகிற்குக் கூட்டிச் செல்வன். பகைவரை யழிக்கவும் உணவுப்
பொருள்களை விளைக் கவும் நன்மக்களைப் பெறவும், அவன் அருள் வேண்டும்.
L. ignis.
இந்திரன்(இந்த்ர)
இடைவெளி யுலகிற் சிறந்த தெய்வம்
இந்திரன். அவன் ஏழு தானவரையும் இலட்சக்கணக்கான தாசரையும் அழித்தனன்; சம்பரன் என்னும்
அசுரனின் நூறு கோட்டைகளைத் தகர்த்து, நாற்பதாண்டின் பின் அவனைக் கண்டு கொன்று, திவோதாசனைத்
துன்பத்தினின்று விடுவித்தனன்; மக்களைத் துன்புறுத்திய பதினா யிரம் விருத்திரரை மாய்த்தனன்.
இத்தகைய செயல்களைப் புரிய ஏழு காற்றுக் கூட்டங்கள்(மருத் கணங்கள்) அவனுக்கு உதவும். அதனால்
மருத்வான் என்று அவனுக்குப் பெயர். அவனுக்கு ஆற்றலுண்டாகுமாறு, சோமவேள்விகளிற் சோமம்
படைக்கப்படும். மலைகளும் கோட்டைகளும் போன்ற மழை பெய்யா முகில்களை, அவன் தகர்த்ததாகச்
சொல்லப்படும்.
வேதக் காலத்தில் வருணனும்
பிற்காலத்தில் இந்திரனும் தலைமைத் தெய்வமாயிருந்தனர்.
உழை(உக்ஷஸ்)
விடியல் தெய்வம். கிரேக்கர்
தெய்வம் ஈயோஸ்
(Eos). உரோமர் தெய்வம் ஆரோரா
(Aurora).
சவிதா, சாவித்திரி(ஸவிதா, ஸாவித்ரீ)
கதிரவன் எழுமுன் பெறும் பெயர்.
சூரியன்(சூர்ய)
கதிரவன் எழுந்தபின் பெறும் பெயர்.
த. சூரன் - வ.
சூர்ய.
விண்டு(விக்ஷ்ணு)
எழுகை, உச்சிச் செலவு, விழுகை ஆகிய
முந்நிலை யியக்கங் கொண்ட சூரியன். ஒ.நோ: த. விண்டு = வானம்.
|