காதற் கணவனா யிருப்பேனென்று, இறைவன் திருமுன்பும், இங்குள்ள பெரியோர் முன்னிலையிலும் (இங்குள்ள பெரியோர் முன்னிலையில்) உறுதி கூறுகின்றேன். மணமகள்: .......................................... ஆகியநான்.................................. ஆகிய உம்மை, இன்று என் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டு, என் உயிர் உடல் பொருள் மூன்றையும், உமக்கே ஒப்புவித்து, என் வாழ்நாள் முழுதும், உம் காதல் மனைவியா யிருப்பேனென்று, இறைவன் திருமுன்பும், இங்குள்ள பெரியோர் முன்னிலையிலும், (இங்குள்ள பெரி யோர் முன்னிலையில்) உறுதி கூறுகின்றேன். க.ஆ. (உறுதி கூறல் முடிந்தவுடன், மணமகன் மணமகள் கழுத்தில் மங்கலநாணைக் கட்டச் செய்து, அல்லது மணமகள் மோதிர விரலில் மோதிரத்தைச் செறிக்கச் செய்து, இரு வரையும் மாலை மாற்றுவிக்கவேண்டும். அதன்பின், மண மக்கள் இருவரையும், பின்வருமாறு வாழ்த்த வேண்டும்). மணமக்களாகிய நீங்கள் இருவீரும், ஓருயிரும் ஈருடலுமாக ஒன்றி, பகுத்தறிவு பாங்கிருக்க, தன்மானந் தழைத்தோங்க, குன்றாச் செல்வமுங் குறையா நலமுங்கொண்டு. உற்றோர் மகிழவும் மற்றோர் புகழவும் (எல்லாம் வல்ல இறைவன் அருளால்) நிலவுலகில் நீடூழி வாழ்ந்திருக்க. (குரவர் - தந்தை, தாய், தமையன், தமக்கை, காப்பாளர், பெரி யோர் ஆகியவருள் ஒருவர்). (1) பிள்ளையார் வணக்கம் பிள்ளையார் வணக்கம் கடைச்சங்க காலத்திற்குப் பின்புதான் தமிழகத்திற் புகுந்தது. இறைவன் ஓங்கார வடிவினன் என்று சொல்லப் பட்டதினாலும், ஓங்காரத்தின் வரிவடிவம் யானைவடிவை ஒத்திருப்ப தாலும், யானை வடிவில் ஒரு தெய்வம் ஆரியப் பூசாரியரால் புதிதாய்ப் படைக்கப்பட்டு, சிவநெறியை முன்னினும் மிகுதியாய் ஆரியப்படுத்தவும் சேயோன் என்னும் முருகனுக்குச் செய்யும் வழிபாட்டையும் அவனுக்குத் தந்தையாகச் சொல்லப்பட்ட சிவனுக்குச் செய்யும் வழிபாட் டையும் குறைக்கவும், தமிழருக்குள் மற்றுமொரு மதப்பிரிவையுண்டு பண்ணவும், புகுத்தப்பட்டதாக அறிஞர் கருதுகின்றனர். சிவன் அல்லது திருமால் என்னும் பெயரால் எல்லாம் வல்ல இறைவன் ஆகிய முழு முதற் கடவுளே வணங்கப்படுதலின், அவனை வணங்குவார்க்கு, அவ னுக்கு மகன் அல்லது மருகன் முறைப்பட்ட வேறொரு சிறுதெய்வம் வேண்டியதேயில்லை. மேலும், இறைவன் படைப்பில் தலைசிறந்த மாந்தன் வடிவில் இறைவனை வணங்குவதே பகுத்தறிவுள்ள மக்கட்கு இழுக்காயிருக்க, ஓர் அஃறிணை யுயிரியின் வடிவில் எத் தெய்வத்தையும் வணங்குவது, இவ் இருபதாம் நூற்றாண்டு உயர்திணையாளனுக்கு எள்ளளவும் பொருந்தாதென்பது சொல்லாமலே பெறப்படும். |