பக்கம் எண் :

தமிழர் வரலாறு-1125

"கீண்டது வேலை நன்னீர் கீழுறக் கிடந்த நாகர்
வேண்டிய வுலக மெங்கும் வெளிப்பட மணிகள் மின்ன" 

(கம்பரா.கடல்தாவு.21)

என்னும் கம்பராமாயண அடிகளும், இங்குக் கவனிக்கத்தக்கன. ஆரியத் தொல்கதை மயக்கினால், இடைக்காலப் பெரும்புலவரும், நாகர்என்னும் மாந்தரினத்தாரைப் பாம்பினமாகக்கருதிவிட்டனர். கீழ்நாடு என்பதையும் கிழக்குநாடென்று கொள்ளாது, நிலத்திற்கும் நீருக்கும்கீழுள்ள நாடென்று கொண்டுவிட்டனர்.

கடல்கோள் நிகழ்ந்தவுடன், பாண்டியன்முன்னரே தான் அணியமாக வைத்திருந்தபெருங்கலத்திலேறி வெள்ளத்தைக் கடந்து,கொற்கைத்துறைப் பக்கம் வந்து சேர்ந்திருத்தல்வேண்டும். அதன்பின், கடல்கோட்குத் தப்பிய தன்குடிகள் வாழ்தற்கு, சோழநாட்டிலும் சேர நாட்டிலும்தென்கோடிப் பகுதிகளை வென்று கொடுத்தான் என்பது,

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புலியொடு வின்னீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்" 

(கலித்.104)

என்னும் முல்லைக்கலித் தரவால் அறியக் கிடக்கின்றது. "மேவார் நாடு","வலியினான் வணக்கிய" என்னுங்குறிப்புகளால், சேர சோழர் நிலந்தரஇணங்காமையும் பாண்டியன் பொருது வென்றதும்அறியப்படும்.

"அடியிற் றன்னளவு..........தென்னவன்வாழி" என்னும் சிலப்பதிகாரப் பகுதியுரையில்,"அங்ஙனமாகிய நிலக்குறைக்குச்சோழநாட்டெல்லையிலே முத்தூர்க் கூற்றமும்சேரமானாட்டுக் குண்டூர்க் கூற்றமு மென்னு மிவற்றை,இழந்த நாட்டிற்காக வாண்ட தென்னவன் வாழ்வானாக வென்றவாறு" என்றுஅடியார்க்குநல்லார் வரைந்திருப்பது, இரண்டாம்கடல்கோட்குப் பிற்பட்ட செய்தியையே குறிக்கும்.

முதற் கடல்கோட்குப்பின் நிகழ்ந்ததுபோன்றே, இரண்டாம் கடல்கோட்குப் பின்னும்,தென்னாட்டு மக்கள் வடதிசையும் வடநாட்டு மக்கள்வடமேலைத் திசையும் பரவிச் சென்றனர்.கடல்கோட் செய்தி பாபிலோனையும் எட்டிற்று.

முதற் கடல்கோள் மாபேரளவினதாயிருந்து ஞாலத்தின் மேற்புறத்தைப் பலவிடத்தும்மிக மாற்றியிருப்பினும், அது மிகப்