பக்கம் எண் :

54தமிழர் வரலாறு-1

மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை

10

பழங்கன்று கறித்த பயம்பமல் அறுகைத
தழங்குகுரல் வானின் தலைப்பெயற் கீன்ற
மன்னுமணி யன்ன மாயிதழ்ப் பாவைத்
தண்ணறு முகையொடு வெண்ணூல் சூட்டித்

15

தூவுடைப் பொலிந்து மேவரத் துவன்றி
மழைபட் டன்ன மணன்மலி பந்தர்
இழையணி சிறப்பிற் பெயர்வியர்ப் பாற்றித்
தமர்நமக் கீத்த தலைநாள் இரவின்" 

(அகம்.136)

இதன் பொருள்:1-9. நெஞ்சே, குற்றமறப்பருப்புடன் கலந் தாக்கிய நெய்மிகுந்தவெண்சோற்றை, நீக்காத ஈகைத் தன்மையுடன்உயர்ந்த சுற்றத்தார் முதலியோரை உண்பித்து,புட்குறி இனிதாகக் கூட, தெள்ளிய ஒளியையுடைய அழகியஇடமகன்ற பெரிய வானம் களங்கமற விளங்க,திங்களைச் சகடம் கூடிய குற்றமற்ற நன்னாளில்,மணமனையைச் சுவடித்துக் கடவுளை வழிபட்டு,மணமேளத்துடன் பெரிய முரசம் முழங்க, தலைவிக்குமணநீராட்டிய மகளிர், தம் கூரிய கண்களால் இமையாதுநோக்கி மறைய,

10-18. மெல்லிய பூவையுடைய வாகையின்அழகற்ற பின் புறத்தைக் கொண்ட கவர்த்த இலையைமுதிய கன்று கறித்த பள்ளத்திற் படர்ந்த அறுகின்,இடி முழங்கிய வானத்து முதன் மழைக்கு அரும்பிய கழுவியநீலமணிபோலும் கரிய இதழையுடைய பாவை யொத்தகிழங்கிடத்துள்ள குளிர்ந்த மணமுள்ள அரும்புடன்சேர்த்துக் கட்டிய வெள்ளிய நூலைச் சூட்டி, தூயபுத்தாடையாற் பொலியச் செய்து, விருப்பத்துடன்கூடி, மழையோசை போன்ற மணவோசை மிகுந்த பந்தலில்அணிகளை மிகுதியாய் அணிந் திருந்ததனால் உண்டானவியர்வையை விசிறியால் ஆற்றி, அவள்சுற்றத்தார் அவளை நமக்குத் தந்த முதல் நாள்இரவில்."

இவை பிற்காலத்தனவாயினும்,பிராமணனும் சமற்கிருத மந்திரமுங் கலவாத பண்டைத்தூய தமிழத் திருமண விழாவின் இயல்பைத்தெளிவாகக் காட்டுவனவாகும்.

மருதத்தை யடுத்து நாட்டிற் கணித்தாகவுள்ள முல்லை நில வாணர், ஆடுமாடெருமை யென்னும்முந்நிரையையும், சிறப்பாக ஆநிரையை வளர்ப்பதைமுதன்மைத் தொழிலாகவும், வானாவாரிப் பயிர்விளைவிப்பதைத் துணைத்தொழிலாகவுங் கொண்டு,பிறர்க்குத் தீங்கு செய்யாதும் ஏறு தழுவி மணக்கும்மறவியலை மேற்கொண்டும் வாழ்ந்துவர; குறிஞ்சியையடுத்துக் காட்டுச் சார்பாகவும் நாட்டிற்குத்தொலைவிலும் உள்ள முல்லைநில வாணரோ, தம்வாழ்நிலம் ஆண்டு தொறும் வேனிலில் வற்றி வறண்டுவெம்பாலையாக மாறியதால்,