முயற்சியைமேற்கொண்டவர், உலகப் பற்றை முற்றத் துறந்துஎல்லா வுயிர்களிடத்தும் அருள் பூண்டமையால்அந்தணர் எனப்பட்டார். "அந்தண ரென்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்." | (குறள்.30) |
இங்ஙனம், கல்வித் தொழிலாளர்,இல்லறம் பேணும் பார்ப்பார் என்றும், துறவறம்பூணும் அந்தணரென்றும் இருபாற்பட்டனர். இங் ஙனமே,அரசரும் குறுநில மன்னர் பெருநில மன்னர் என்றும்,வணிகரும் நிலவணிகர் நீர்வணிகர் என்றும்,உழவரும் உழுதுண் போர் (கருங்களமர்)உழுவித்துண்போர் (வெண்களமர்) என்றும், இவ்விருதிறப்பட்டனர். கருங்களமர் காராளர் என்றும்,வெண்களமர் வெள்ளாளர் என்றும்சொல்லப்பட்டனர். இவ்விரு சாரார்க்கும்வேளாளர் என்பது பொதுப்பெயராகும். ஏனை மூவர்போலாது, புதிதாய் வந்தவர்க்கும் அன்புடன்விருந்தோம்பி வேளாண்மை செய்வதனால், உழவர்வேளாளர் எனச் சிறப்பிக்கப் பட்டனர்.வேளாண்மை பிறரை விரும்பியாளுந் தன்மை. "வேளாளன் என்பான் விருந்திருக்க வுண்ணாதான்." | (திரிகடு.12) |
குறிஞ்சிநிலத்தார், குறவர், குன்றவர், இறவுளர்,கானவர் வேட்டுவர் என்றும்; முல்லைநிலத்தார், ஆட்டிடையர், மாட்டி டையர்என்றும்;நெய்தல்நிலத்தார் நுளையர், திமிலர்,பரதர் (பரவர்) என்றும்; பாலைநிலத்தார் எயினர்,மறவர், வேட்டுவர், வேடர் என்றும்; இடம்பற்றியும்தொழில்பற்றியும் கருவிபற்றியும் சிற்சிலவகுப்பாராய்ப் பிரிந்து போயினர். ஆயர், இடையர், கோவர், தொறுவர்,பொதுவர் என்னும் பெயர்கள், பெயர்வேற்றுமையேயன்றிக் குலவகுப்பைக் குறியா. ஆன்வல்லோர் (திவா.) என்றும்,ஆன்வல்லவர் (சூடா.) என்றும் ஆயர்க்குப்பெயருண்மையால், கோவலன் என்பது கோமேய்ப்பதில் வல்லவன் என்று பொருள்படும்தென்சொல்லே யன்றி, கோபாலன் என்னும்இருபிறப்பி வடசொல்லின் திரிபாகாது. பாலைநிலம் குறிஞ்சியையடுத்ததாதலின், வேட்டுவர் என்னும் பெயர் கொண்டவகுப்பார் இருநிலத்திலும் இருந்தனர். கடியநெடுவேட்டுவன் என்னுங் கொடையாளிகோடைமலைக்குத் தலைவன். சிலப்பதிகாரத்திற்பாடப்பட்டுள்ள வேட்டுவ வரிபாலைவாணரைப்பற்றியது. உறைக்காலத்து மொழித் துறையில், எகரஒகரக் குறிகளும் ள,ழ,ற,ன மெய்களுந் தோன்றிநெடுங்கணக்கு நிரம்பியிருத்தல்
|