அடிப்படையாக வைத்தாராய்ந்து,
தமிழர் நண்ணிலக் கடற்கரை யினின்று வந்தவர்
என்னும் தவறான முடிவு கொண்டுள்ளமையால் இற்றை
யிந்தியாவிலுள்ள மலைவாணரெல்லாம் திரவிடப்
பழங்குடி மக்களென்று மயங்கிக் கூறுகின்றனர்.
திரவிடரைத் தோற்றுவித்த தமிழரின் முன்னோர்
குறிஞ்சிநிலத்தில் வாழ்ந்த நாகரிகத்
தொடக்கநிலை முழுகிப் போன குமரிக்கண்டத்தின்
தென் கோடியிலேயே கழிந்துவிட்டது. இன்று
மலைவாணராயுள்ள தமிழரும் திரவிடரும் சிலபல
நூற்றாண்டிற்குமுன் போர், கொள்ளை,
கொள்ளைநோய், பஞ்சம், கொலைப்பழி மதத்
துன்புறுத்தம் முதலியவற்றிற்குத் தப்பி
மலையேறிப் பிழைத்த மக்களின் வழியினரே.
தமிழ்நாட்டில் இன்றுள்ள மலைவாழ்
குலத்தாருள் மிகப் பழமையானவர், நீலமலை
உச்சியிலுள்ள துடவரே. அவரும், அவர்தம் முன்னோர்
அங்கு முதன்முதற் குடியேறியவர் என்றே கூறுகின்றனர்.
அவர் மொழியும் செந்தமிழின் சிதைவான ஒருவகைக்
கொடுந்தமிழே என்பது வெள்ளிடைமலை. அவர் எருமை
மந்தையை வைத்துப் பிழைப்பதனால், அவரது ஒவ்வொரு
குடியிருப்பும் மந்து எனப்படுகின்றது. அவர்
குடும்பத்தை மன் (மனை) என்றும், தெய்வத்தைக்
கடவுள் என்றும், வழிபாட்டு மனையைக் கோயில்
என்றும், சொல்கின்றனர். அவர் மொழியின்
கொடுந்தன்மையையும் கொச்சைத் தன்மையையும்
கீழ்வரும் சொல் வரிசைகளாற் கண்டுகொள்க.
சோழ பாண்டி நாட்டின் நிலமட்டம்
நோக்கி, பள்ளமான திசை
கிழக்கு(கீழ்-கீழ்க்கு-கிழக்கு) என்றும், மேடான
திசை மேற்கு (மேல்-மேற்கு) என்றும் பெயர் பெற்றன.
நீலமலை யுச்சியில் வாழும் துடவரும் மேற்றிசையை
மேக்(மேற்கு) என்கின்றனர். இத்தகைய சொல்
ஒன்றிரண்டே, அவரின் முன்னோர் கீழிருந்து
சென்றனர் என்று காட்டவும் நாட்டவும்
போதுமாயினும், எவரும் எளிதில் ஐயந்திரிபற
அறிதற்பொருட்டுப் பல்வேறு சொல்வரிசை கள்
கீழ்க் காட்டப் படுகின்றன. எட்கார் தரசத்தன்,
ஐயப்பன் முதலியோர் தென்னாட்டு மலைவாழ்
வகுப்பாரைப் பற்றி எழுதியிருப்பதையும் காண்க.
துடவச் சொற்கள்
முறைப்பெயர்
தமிழ்
|
துடவம்
|
தாய்
அவ்வை(தாய்) |
தோய்
அவ் |
|