எ-டு: இடக்கரடக்கல்
: ஒன்றிற்கு இரண்டிற்குப்போதல்,
பவ்வீ.
மங்கலம்
: கொடித்தட்டுதல் = பாம்பு கடித்தல்.
பெரும்பிறிது = சாவு.
குழூஉக்குறி
: செந்தலை = அரைக்கால்.
கருந்தலை=கால். தங்கான் = அரை. அரும்பு = அரிசி.
(3) ஓரினப்படுத்தலும் (Generalisation)
வேறினப்படுத்தலும் (Discrimination).
ஓரினப்படுத்தல்
பல்வேறுவகைப் பொருள்களை, ஒரு
பொதுத்தன்மைபற்றி ஒரு சொல்லாற் குறித்தல்
ஓரினப்படுத்தலாம்.
எ-டு: மாடு-பெற்றமும் (காளையும்
ஆவும்) எருமையும்.
மான்-உழை, புல்வாய்,
நவ்வி, புகர் (புள்ளிமான்),
மரை, வருடை, கடமை,
மிழா, காசறை, கவரி, குதிரை, முதலியன.
தும்பி-முன்தூம்பு
(proboscis)
உடைய யானையும் குளவியும்.
விலங்கு, பறவை, மரம், மீன் என்பன மிக
விரிவாக ஓரினப் படுத்தும் சொற்கள்.
பெருநெல்லி, அரிநெல்லி,
கீழ்வாய்நெல்லி என்பவற்றை நெல்லி
யினப்படுத்தியதும் ஓரினப்படுத்தலே.
வேறினப்படுத்தல்
ஒரே இனமான அல்லது ஒத்த தோற்றமுள்ள
பொருள்களை, நுண்ணிய வேறுபாடுபற்றி வெவ்வேறு
சொல்லாற் குறித்தல் வேறினப் படுத்தலாம்.
எ-டு: இலை-இலை, தாள், தோகை, ஓலை.
நிலைத்திணை-பூஞ்சணம்,
பாசம், பாசி, காளான், புல், பூண்டு, கோரை, பயிர்,
தட்டை, கொடி, தூறு, செடி, மரம். நுளம்பு-நுள்ளான்,
உலங்கு.
சமைத்த தவசவுணவு-சோறு,
கஞ்சி, கூழ், களி.
இனி, சிறப்புச்சொற்களன்றிப்
பொதுச்சொற்களே வெவ் வேறடை பெற்றுப்
பொருள்களை வேறினப்படுத்தலு முண்டு.
எ-டு: சிற்றெறும்பு,
பொடியெறும்பு, ஆயெறும்பு, செவ் வெறும்பு, மழை
யெறும்பு, மண்டை யெறும்பு, பிள்ளையார் எறும்பு,
கட்டெறும்பு.
|