பக்கம் எண் :

இயனிலைப் படலம்113

முதலில் ஆகாரவுயிரும் அதையடுத்து மகரமெய்யும் தோன்றியிருத்தல் வேண்டும்.

யகரம் தோன்றுமுன் ஈகார இகரமும், வகரம் தோன்று முன் ஊகார உகரமும், தோன்றியிருத்தல் வேண்டும்.

ள, ழ, ற, ன தோன்றுமுன் எல்லா வுயிர்களும் தோன்றி யிருக்கலாம்.

(3) மெல்லின மெய்களுள், மகரம் ஒன்றே தனியே தோன்றி யிருத்தல் வேண்டும். ஏனையவெல்லாம் ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ன்ற எனத் தன்தன் வல்லினமெய்யுடன் இணைந்தே தோன்றியிருத்தல் கூடும்.

குழவிகளின் தொண்டையில் ங்க என்னும் ஒலி பிறத்தல் காண்க.

வல்லினமெய்கள் தனித்தனி தோன்றியிருத்தல் கூடும்.

(4) மாந்தன் அல்லது முந்தியல் தமிழன் பேசிய இயற்கை மொழி, உயிர், மெய் என்னும் பகுப்புணர்ச்சியின்றி, ஓரசையும் பலவசையுமாகிய ஒலிகளையும் ஓசைகளை யுமே கொண்டிருந்தது.

மெய்தோன்றிய வகைகள்

(1) ஒப்பொலி - க் (காக்கா), ண்(கிண்).

(2) வாய்ச்செய்கை - வ் (அவ்), ம் (அம்).

(3) இனத்தோன்றல் - ங் (ங்க), ன்(ன்ற).

(4) புணர்ச்சி - ஞ் (பூ+சோலை=பூஞ்சோலை)

(5) திரிபு - ந் (பொரும்-பொருந்), ர்(ல்-ர்)

(6) முதிர்ச்சி - ழ் (ள-ழ), ற் (ர-ற).

(7) இயற்கை - த், ப்.

அளவு (மாத்திரை)

எழுத்துகளின் ஒலியளவு அளபு அல்லது மாத்திரை யெனப்படும். மாத்தல் - அளத்தல். இது ஒரு வழக்கற்ற வினை. மாத்திரம் என்னும் சொல்லும் இதனடிப் பிறந்ததே. மா என்னும் அளவுப்பெயர் முதனிலைத் தொழிற்பெயராம்.

ஓர் இமை அல்லது நொடியளவு ஒரு மாத்திரை. உயிராயினும் உயிர்மெய்யாயினும், குறிலுக்கு ஒன்றும் நெடிலுக்கு இரண்டும் மாத்திரையாம். உயிர்மெய்யில் உயிரும் மெய்யும் ஆகிய ஈரெழுத்