ஆயின், கி.மு. 1200 ஆண்டுகட்கு முன்
இயற்றப்பட்ட ஆரிய வேதத்தில் நூற்றுக்கணக்கான
தென்சொற்கள் உள்ளமையே, தமிழின் தொன்மைக்கு
அதனினும் சிறந்த இலக்கியச் சான்றாம்.
(1) சாயம்
எடு :
சாயம்
(ஸாயம்) = சாயுங்காலம்
சாய் - சாயும்
(எதிர்காலப் பெயரெச்சம்)
சாயுங்காலம் = பொழுது
சாயும் வேளை.
பொழுது சாய்கிறது, பொழுது சாய
வந்தான், என்பது இன்றும் வழக்கம்.
சாயுங்காலம் என்பது, சாயங்காலம்,
சாய்ங்காலம் என உலக வழக்கில் திரியும்.
இங்ஙனமே, சாயுந்தரம் என்னும்
சொல்லும் சாயந்தரம், சாய்ந்தரம் எனத்
திரியும். சாய்தல் என்னும் சொல் தனித்தும்
பொழுது சாய்தலைக் குறிக்கும். செய்கையிலே
என்னும் 7ஆம் வேற்றுமை யுருபேற்று ஏகார வீறு பெற்ற
தொழிற்பெயர் ஒரு நிகழ்கால வினையெச்சத்துடன்
சேர்ந்து, அவ் வினைச்சொல்லாற் குறிக்கப்படும்
செயல் நிகழும் நிலையை உணர்த்துவது மரபு.
எ.டு :
வரச்செய்கையிலே
(வரும்போது),
போகச்செய்கையிலே
(போகும்போது)
இச் செய்கையிலே என்னும் சொல் சிலே,
சே என்று கொச்சை வடிவுங்கொள்ளும்.
எ.டு :
வரச்சிலே,
போகச்சிலே
வரச்சே, போகச்சே
இக் கொச்சை வடிவு கொண்ட சாயச்சே
என்னும் சொல், சாய்கிற வேளை என்று பொருள்படுவது
போல் சாய்கிறச்சே என்னும் தவறான வடிவு கொண்ட
பின், சாயரட்சை என்று திரித்து வழங்கப்படுகிறது.
சாயங்காலம் என்னும் வடிவிலுள்ள சாயம்
என்னும் நிலை மொழியே, சாயுங்காலம் (எற்பாடு)
என்னும் பொருளில் முன்பு வட திரவிடத்தில்
வழங்கிப் பின்பு ஆரிய வேதத்திற் புகுந்து
அதன்பின் சமற்கிருதத்தில் வழங்கிவருகின்றது.
ஆயின், வட மொழியாளர் இவ் வுண்மையை மறுத்தும்
மறைத்தும் தலைகீழாய் மாற்றியும் ஸாயம் என்னும்
வடசொல்லினின்றே சாயங்காலம் என்னும்
தென்சொல் வந்ததென்று துணிந்து ஏமாற்றுவர்.
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகரமுதலியிலும்,
இதை வடசொல்லென்று குறித்ததுடன் இவ்
|