பக்கம் எண் :

முன்னுரை19

பள்ளிபடைப் படமாடம்‘ (The Funeral Tent of An Egyptian Queen) என்னும் தம் வரலாற்றாராய்ச்சி நூலின் இறுதியில், மொழிநூல் (Philology) என்னும் தலைப்பில், தக்க சான்று காட்டித் திட்ட வட்டமாய்க் கூறியுள்ளார்.

இதினின்று, கடல்கோளுக்குத் தப்பியும் வேற்று நாடு பரவியும் சென்ற முதுபண்டைக் குமரி மாந்தருள் வட மேற்காகச் சென்ற ஒரு பெரு வகுப்பார், சோமாலிநாடு(Somaliland), அபிசினியா(Abyssinia) என்னும் எத்தியோப்பியா, எகிபது ஆகிய நாடுகளில் முறையே பரவி, பின்பு ஐரோப்பாவிற்குச் சென்றதாகத் தெரிகின்றது. இதுவே, ஆத்திரேலியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடைப்பட்டிருந்த குமரிக்கண்டத்தினின்று வட மேற்காய்ச் செல்வார்க்கு ஏற்ற இயற்கையான வழி என்பதை, ஞாலப்படம் (Atlas) நோக்கிக் கண்டு கொள்க.

இனவொப்புச் சொற்கள்

அரபிச்சொற்கள்

தமிழ் அரபி தமிழ் அரபி
அப்பன்
அம்மை
அரிசி
அல்(எதிர்மறை
யிடைச்சொல்)
அல்,க. அல்லி (அங்கு)
ஆவி
.
கடி
கதம்(சினம்) கருவா(ப்பட்டை)
காழகம்(துணி)
குப்பா
குயின் (முகில்)
ஆப்
உம்
ருஸ்(z)
லா
.
அல் (அந்த)
.
ஹவா
(காற்று)
கட்
கடப்
கிர்வா(க)
காம்
ஜு ப்பா
கைம்
கூலி
கொட்டை(பஞ்சு)
க.கொத்தி(பூனை)
சருக்கரை சேரி(தெரு)
சுக்கல
(காய்தல்)
ஞாலம்
துத்தம்
நீலம்
நெருப்பு
மறி(பெண்
குதிரை)
மை(நீர்)
வாத்து
கூலி
குட்டுன்
குட்டா
சக்கர்
ஷாரி
சுக்கூனஹ்
(காய்ச்சல்)
ஆலம்
தூத்திய
நீலா
நார்
.
பரஸ்
மா
பட்டா