நல்லாருரையாலும், (P.T.)
சீநிவாசையங்கார், சேசையங்கார், இராமச்சந்திர
தீட்சிதர் முதலியோர் எழுதிய வரலாற்று நூல்க
ளாலும், என் ‘முதற்றாய் மொழி‘ முன்னுரையாலும்
தெள்ளத் தெளியத் தெரிந்திருந்தும், சில
தமிழ்ப் பகைவரும் கொண்டான் மாரும், தமிழை
வடமொழி வழிய தெனக் காட்டல் வேண்டித் தமிழர்
வடக்கேயிருந்து வந்தனரென்று பிதற்றி
வருகின்றனர்.
தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டமே
என்பதற்குச் சான்றுகளாவன:
(1) தமிழும் அதனொடு
தொடர்புள்ள திரவிட மொழிகளும் நாவலந்
தேயத்திற்குள்ளேயே வழங்குதலும்; தென் மொழி
வடக்கே செல்லச் செல்லத் திரிந்தும்
ஒடுங்கியும் இலக்கியமற்றும் இடையீடு பட்டும்,
தெற்கே வரவரத் திருந்தியும் விரிந்தும்
இலக்கியமுற்றும் செறிந்தும் இருத்தலும்.
(2) நாவலந்
தேயத்திற்கு வெளியே திரவிட மொழியின்மையும்,
மேலை மொழிகளிலுள்ள தென் சொற்கட்கெல்லாம்
தமிழிலேயே வேரிருத்தலும்.
(3) முழுத்தூய்மையுள்ள
தமிழ் தென்னாட்டில் தென் கோடியில்
வழங்குதல்.
(4) தமிழ்நாட்டுள்ளும்
தமிழ் தெற்கே செல்லச் செல்லத் திருந்தியும்
சிறந்தும் இருத்தல்.
("திருத்தக்
கல்லிற்குத் தெற்கிட்டுப் பிறந்தவன்"
என்னும் வழக்கும் இதை உணர்த்தும்.)
(5) வடநாட்டு
மொழிகளிலும் தெலுங்கு முதலிய திரவிட
மொழிகளிலுமுள்ள வல்லொலிகள்
தமிழிலின்மையும், எட்டும் பத்தும்
பன்னிரண்டுமாக மெய்யொலிகள் கொண்ட
மொழிகள் ஆத்திரேலியாவிலும் அதனையடுத்த
தீவுகளிலும் வழங்குதலும்.
(6) தமிழ்
முழுவளர்ச்சியடைந்து முத்தமிழானபின் ஏற்பட்ட
தலைக்கழகம், குமரிக்கண்டத்தின் தென் கோடிப்
பஃறுளி யாற்றங்கரை மதுரையில் இருந்தமையும்,
குமரிக்கண்டத் தோற்றத்தின் எண்ணிற்கு
மெட்டாத் தொன்மையும்.
(7) தென்னைமரம்
ஆத்திரேலியத் தீவுகளினின்றே பிற
தென்கிழக்குத் தீவுகட்குக்
கொண்டுவரப்பட்டதாகச் சொல்லப் படுவதும்,
குமரிக் கண்டத்தில் ஏழ்தெங்க நாடிருந்
தமையும், தென் என்னுஞ் சொல் தென்னை
மரத்தையும் தெற்குத் திசையையுங் குறித்தலும்.
|