பெற்றன. ஆயினும், இன்றும், அவ்வுதல்
உலக வழக்கில் வாயினாற் பற்றுதலை உணர்த்தும்.
எ-டு:
கன்று
புல்லை ஒளவித் தின்கிறது.
அவ்வு-ஒளவு, கவ்வு-கௌவு,
வவ்வு-வௌவு.
அவ்-அவா-அவாவு-ஆவு-ஆவல்.
ஈ-இளி. இளித்தல் =
பல்லைக் காட்டுதல்(அஃதாவது
வாயைப்
பின்னுக்கிழுத்து விரித்தல்), சிரித்தல்.
ஒப்பொலிகட்கும் வாய்ச்செய்கை
யொலிகட்கும் வேற்றுமை யென்னெனின், முன்னவை
ஒலியையும் காற்றையும் பின்னவை அமைந்த
நிலையையும், அடிப்படையாகக் கொண்டவை என்க.
இசித்தல் என்பது ஒலிபடச்
சிரித்தலையும், இளித்தல் என்பது ஒலியின்றிச்
சிரித்தலையும் குறிக்கும் என வேறுபாடறிக.
கவ்வு என்னும் சொல், கவ்வை, கப்புதல்,
கப்பு, கப்பித்தல், கப்பை, கவட்டி, கவட்டை, கவடு,
கவடி, கவண், கவணை, கவண்டு, கவண்டி, கவர், கவர்வு,
கவல், கவலை, கவவு, கவளம், கவளி, கவளிகை, கவுள்,
கவறு, கவான், கவை, காவு, கா, காவடி, காவட்டு, காதல்,
காமம் முதலிய பல சொற்களைப் பிறப்பித்துள்ளது.
(6) குழவிவளர்ப் பொலிகள் (Nursery
Sounds)
குழவிவளர்ப்பில் குழவிகள் இயல்பாக
ஒலிக்கும் ஒலிகளி னின்று தாய்மார் சில
சொற்களை அமைத்துக் கொள்வதுண்டு. அத்தகைய
ஒலிகள் குழவிவளர்ப்பொலிகள். அவை மிகச் சிலவே.
எ-டு: இங்கு - இங்கா = பால்.
குழவிப் பருவத்தினும் பெரியது
குழந்தைப் பருவம். அப் பருவத்தில், சோறு
என்பதைச் சோ, சோய், சோசி என்று குழந் தைகள்
கொச்சையாய்ச் சொல்பவை குழவி வளர்ப்
பொலிகளாகா. டும் டும் (tom
tom), பீப்பீ(pipe)
என்பன போன்றவை குழந்தைகள் சொல்லும்
ஒப்பொலிச் சொற்கள்.
குழவிகள் மம, பப என்று இயல்பாக
அடுக்கி ஒலிப்பதினின்று ஆங்கில நற்றாயரும்
செவிலித் தாயரும் மம்மா (mamma),
பப்பா (papa)
என்னும் முறைப்பெயர்களை அமைத்துக்கொண்டதாக
மொழி நூலாசிரியர் சிலர் கூறுவர். ஆயின்,
ஆங்கிலம் தோன்று முன்பே, வடசேமியக் கிளையைச்
சேர்ந்த அரமிய (Aramaic)
மொழியில் அம்மா, அப்பா என்னும் சொற்கள்
வழங்கியிருக் கின்றன. சுமேரிய நாகரிகம் தமிழ
நாகரிகத்தின் திரிபாதலாலும், குமரிநாட்டு
மக்களே ஆப்பிரிக்க வழியாக ஐரோப்பா சென்று
பரவி யிருப்பதாகத் தெரிவதாலும், அம்மா அப்பா
என்னுஞ் தமிழ்ச்சொற்
|