அகு, அசு, அடு, அது, அபு, அவு, அறு; அக்கு, அச்சு,
அட்டு, அத்து,
அப்பு, அற்று ; அண், அம், அர், அல், அழ், அள், அன்
என்னும் ஈறுகளும், இவற்றிற் கொத்த இகரவுகரமுதல்
வடிவுகளுமே, இன்று
முறையே கு, சு, டு, து, பு,வு, று; க்கு, ச்சு, ட்டு, த்து, ப்பு,
ற்று; ண், ம், ர், ல், ழ், ள், ன் எனத்
தோன்றுகின்றன. இவையெல்லாம் உண்மையிற்
சுட்டடியினவாகும்.
இங்குக் காட்டப்பட்டுள்ள அன், அள்,
அர், அது, அவை, அ என்பன பாலீறுகளல்ல; அண், அழ்
என்பன போன்று இயல்பான பொது வீறுகளே.
சில இடப்பெயர்கள் சிலவிடத்துச்
சுட்டடியீறுகள் போல் தோன்றும். அவற்றின்
வேறுபாடறிதல் வேண்டும்.
எ-டு : சுட்டடியீறு
: அகம்-கழகம் என்பதிற்போல்
ஒரு பெயரீறு (அகு+அம்).
இடப்பெயர்
: அகம் = மனை, இடம். கல்லகம் =
கல்விச் சாலை (கற்குமிடம்), கன்மலை, கல்லுள்ள
இடம்.
சுட்டடியீறு
: இடம்-ஓர் ஈறு, எ-டு: கட்டிடம் = மனை.
இடப்பெயர்
: இடம்-ஒரு பெயர்ச்சொல்.
எ-டு:
இருப்பிடம் = இருக்குமிடம்.
கட்டிடம் = கட்டுகின்ற இடம்.
ஓர் ஈறு பல வகையில் தோன்றலாம்.
எ-டு : அவு
: இரா-இர-இரவு, செல்-செலவு
அன்
: அம்-அன், அல்-அன்.
அந்து
: அம்-அந்து, அது-அந்து,அத்து-அந்து.
பல சொற்களில் லகரம் தகரமாகத்
திரிவதாலும், மெல் என்னுஞ் சொல் மெது என்று
திரிந்திருப்பதாலும், அது என்னும் சுட்டடியீறு அல்
என்பதன் திரிபாகவே கொள்ளப்பட்டது. அஃது என்பது
அது எனத் தொக்கதென்று கொள்வதற்கிடமுண்டேனும்,
அது என்பதன் வலி இரட்டிய வடிவமான அத்து என்பது, பஃது
என்பதோடொப்ப ஆய்த மிடையிட்ட மறுவடிவு
கொண்டதென் பதே பொருத்தமாம்.மெது
மெத்தென்றாயதுபோல் அது அத்தென் றாயது; பது
பத்தென்றாயது. ஆய்தத்தை யடுத்த தகரம், அஃறிணை,
கஃறீது, பஃறி, பஃறுளி என்பவற்றிற்போல்
றகரமாகத் திரிவதே புணர்ச்சியிலக்கண மாதலால்,
அஃது பஃது என்பவற்றி லுள்ள ஆய்தம் இயல்பான
இடையெழுத் தன்றென்றும், தொல்காப்பியர்
|