(11) மரூஉ
சில தனிச்சொற்களும்
கூட்டுச்சொற்களும் தொடர்ச் சொற்களும்,
வழக்காற்றில் மருவி, அதாவது இலக்கணியரால்
ஒப்புக்கொள்ளப்பெறும் வகையில் குறுகியும்
திரிந்தும் வழங்கு கின்றன.
எ-டு:
தனிச்சொல் : எலும்பு-என்பு,
தென்கு-தெங்கு, நடுவண்-நாப்பண்,
நெருநல்-நெருநற்று-நேற்று, பகுதி-பாதி, பெயர்-பேர்,
பெருமகன்- பெருமான்-பெம்மான், பிரான்;
பொழுது-போழ்து-போது, யானை-ஆனை, வியர்-வேர்.
கூட்டுச்சொல் : அரையுழக்கு-ஆழாக்கு,
சுமையடை-சுமடு-சும்மாடு, சோழ நாடு - சோணாடு,
தெங்கங்காய்-தேங்காய், புகவிடு-புகட்டு-போட்டு,
புழைக்கை-பூழ்க்கை-பூட்கை, போகவிடு-போகடு-போடு,
வரை யாடு-வருடை, மார்யாப்பு-மாராப்பு,
முகக்கூடு-முக்காடு.
தொடர்ச்சொல்
அருமருந்தன்ன-அருமாந்த-அருமந்த.
கரிவலம் வந்த நல்லூர்-கருவை.
பூட்கை, போடு என்பனபோன்ற சொற்கள்,
மூலநிலையில் கூட்டுச் சொல்லாயினும், மரூஉ
நிலையில் ஒருசொற்போல் நின்று ஒரே பொருள்
தருதலால், தனிச்சொல்லாகவே கொள்ளப்படும்.
(12) முன்னொட்டுகளும் அடைகளும் (Prefixes
and Epithets)
பொருள்
|
முன்னொட்டு
|
எடுத்துக்காட்டு
|
காலமும்
இடமும் மூவிடம்
|
முன்,
பின்,
உடன்
எம், உம், (நும்), தம்எம்பி,உம்பி,(நும்பி),தம்பி. |
முன்னேறு, பின்வாங்கு,
உடன்படு
.
.
.
|
சிறுமை
|
அரி
அரிசி
அரை
உமி
ஊசி
எலி | அரிநெல்லி,
அரிக்குரல்.
அரிசிப்பல்,அரிசிக்களா
அரைத்தவளைஅமித்தூறல்
ஊசிமிளகாய், ஊசித்தொண்டை, ஊசிவெடி
எலியாமணக்கு |
|