பக்கம் எண் :

110தமிழ் வரலாறு

அந்தணர் என்னும் பிராமணரை வெண்பாவிலும், அரசரை ஆசிரியப்பாவிலும், வணிகரைக் கலிப்பாவிலும், வேளாளரை வஞ்சிப்பாவிலும் பாடவேண்டும். இவை பாட்டிய லிலக்கணம்.

(5) குலத்திற்கேற்பக் கலம்பகச்செய்யுள் தொகையும், ஓலை நறுக்களவும், நாடகச்சுவையும் நாற்பொருளும் வகுக்கப் பட்டமை.

கலம்பகம் என்னும் பனுவலைப் பாடும்போது, தேவர்க்கு 100 செய்யுளும், பிராமணருக்கு 95 செய்யுளும், அரசருக்கு 90 செய்யுளும், அமைச்சருக்கு 70 செய்யுளும், வணிகர்க்கு 50 செய்யுளும், வேளாளர்க்கு 30 செய்யுளும் அமைத்துப் பாடுதல் வேண்டும்.

பாட்டெழுதும் ஓலைநறுக்கின் அளவு, பிராமணருக்க 24 விரல், அரசருக்கு 20 விரல், வணிகருக்கு 16 விரல், வேளாளருக்கு 12 விரல்.

நாடகத்தலைவன் குலத்திற்கேற்ப நாடகப்பொருளும் சுவையும் பின்வருமாறு அமைதல்வேண்டும்.

தலைவன் பொருள் சுவை
பிராமணன்
அரசன்
.
வணிகன்
வேளாளன்
அறம்பொருளின்பம்வீடு அறம்பொருளின்பம்
.
அறம்பொருள்
அறம்
ஒன்பான் சுவை
இளிவரலும் சமநிலை
யும் ஒழிந்தவை
சமநிலை ஒழிந்தவை
பெருமிதமும் சம
நிலையும் ஒழிந்தவை

இங்ஙனம், இடைக்காலத்தெழுந்த பாட்டியல் நூல்களும் நாடக நூல்களும் வரையறுக்கின்றன.

(6) செய்யுள்நிலத்தை ஏழாகவும் அவற்றுள் ஒன்றான பாட்டை எண்வனப்பாகவும் வகுத்த பண்டைத் தமிழ் முறை போய், பெருங் காப்பியம் சிறுகாப்பியம் என்றும் தொண்ணூற்றாறு வகைப் பனுவல் என்றும் ஒருமருங்கு வடநூல் தழுவிய பாகுபாடே வழங்கி வருகின்றமை.

(7) தொல்காப்பியத்திற் கூறப்பட்ட இருபத்தாறு செய்யு ளுறுப்புகள் ஆறாகக் குறைந்தமை.

(8) தமிழில் இல்லாததும் அதற்கு ஏற்காததுமான இடுகுறிப் பெயரை, வடநூன்முறை தழுவித் தமிழுக்கும் வகுத்தமை.

(9) பல இலக்கணக் குறியீடுகளும் செய்யுட்பெயர்களும் பனுவற்பெயர்களும் வடசொற்களாய் வழங்கத் தலைப் பட்டமை.