|
எ-டு:
போல், நிகர்
- (முதனிலை)
போன்று, செத்து
- (இ.கா.வி.எ.)
போல, புரைய
- (எ.கா.வி.எ) - (Infinitive
Mood)
போன்ற, ஒத்த
- (இ.கா.பெ.எ.)
போலும், ஒக்கும்
- (எ.கா.பெ.எ.)
போலும், ஒக்கும்
- (எ.கா.வி.மு.)
உடன்பாட்டிடைச்சொற்கள்:
எ-டு: சரி,
சரிசரி, ஆகட்டும்.
ஒத்துக்கோ ளிடைச்சொற்கள்:
எ-டு: ஆம்,
நல்லது, மதி (புத்தி-வ.)
ஆவலாதி யிடைச்சொற்கள்:
எ-டு: பார்த்தையா
பார்த்தையா, கேட்டையா கேட்டையா. ஆவலாதி-
முறையீடு.
அரற்ற லிடைச்சொற்கள்:
எ-டு: கூகேகூ, குய்யோ முறையோ
வேசாற் றிடைச்சொற்கள்:
எ-டு: அக்கடா, சிவாசிவா. வேசாறல் -
இளைப்பாறல்.
விளி யிடைச்சொற்கள்:
எ-டு: இந்தா, ஏன்காணும் - உலக வழக்கு
அம்ம - செய்யுள் வழக்கு
ஏ, ஓய், வே என்பன இழிவழக்காம்.
உரைமுக இடைச்சொற்கள்:
எ-டு: அந்த, இந்த - உலக வழக்கு.
ஆங்க - செய்யுள் வழக்கு.
தொகைமுக இடைச்சொற்கள்:
எ-டு: ஒரு, ஒருபத்து
விழுக்காட் டிடைச்சொற்கள்:
பேச்சில் இடையிட்டுத் திரும்பத்திரும்ப
வரும் பொருளற்ற சொல் விழுக்காட்டுச்
சொல்லாம்.
எ-டு: வந்து, பின்னே
தோல்வியாட் டிடைச்சொற்கள்:
எ-டு: குழமணிதூரம், பொங்கத்தம்
பொங்கோ, தோலே தோலே.
அடைக்கலம் வேண்டிடைச் சொல்: ஓலம்.
இணைப்புச் சொற்கள் (Conjunctions)
|