(1) முன்னொட்டுகள் (Prefixes)
எ-டு:
அல் - அ: அவலம்.
அல்: அஃறிணை, அல்வழி, அன்மொழி.
மிகு - மீ: மீக்கூற்று, மீச்செலவு, மீந்தோல்.
நல் - ந: நக்கீரன், நச்செள்ளை, நத்தத்தன்,
நப்பசலை.
அகவலைப்படுத்துதல், இடைச்செருகல், உட்கோள்,
உடன் பிறப்பு, உழிதருதல், உழைச்செல்வான்,
ஊடுருவல், கடைத்தேறல், கீழ்ப்படிதல், தலைக்கூடல்,
நடுத்தீர்ப்பு, பிற்போக்கு, புறங்கூற்று, மறுமுள்
பாய்தல், முன்னேற்றம், மேற்பார்வை, வழிமொழிதல்,
வெளியிடுதல் என்னும் சொற்களின் முதலிலுள்ள அகம்
இடை, உள், உடன், உழி, உழை, ஊடு, கடை, கீழ், தலை, நடு,
பின், புறம், மறு, முன், மேல், வழி, வெளி என்னும்
முன்னொட்டுகளும், இடைச் சொல்லாக ஆளப்பெற்ற பிறசொற்களே.
இவற்றின் நேர் ஆங்கில அல்லது ஆரியச்சொற்கள்
பெரும்பாலும் தூய முன்னொட்டுகளா யிருத்தல் காண்க.
ஆரியச்சொற்கள் திரிசொற்களாதலின், தோற்றம்
மறைந்துள்ளன; தமிழ்ச்சொற்கள் எல்லாம் இயற்சொற்களாதலின்,
தோற்றந்தெளிவாயும் தமித்து வழங்குவனவாயு முள்ளன.
இதுவே இவைதம்முள் வேற்றுமை.
(2) வரிசை யிடைச்சொற்கள்
ஆம் - ஒன்றாம், முதலாம், நூறாம்.
ஆவது - ஒன்றாவது, நூறாவது, ஆயிரத்தாவது.
(3) இணைப்புச்சொற்கள் (Conjunctions)
அடுக்கிணைப்புச்சொற்கள்:
உம் - அறமும்
பொருளும் இன்பமும் வீடும் என உறுதிப் பொருள் நான்கு.
ஏ - எழுத்தே
அசையே சீரே தளையே அடியே தொடையே எனச் செய்யுளுறுப்புகள்
ஆறு.
மறுநிலை யிணைப்புச்சொற்கள்:
எ-டு: ஆயினும், ஆகிலும்-
வீடாகிலும் மனையாகிலும் உடனே
வாங்கியாகவேண்டும்.
ஆதல் - புலவர் சின்னாண்டாராதல்
புலவர் கந்தாண்டாராதல்
புகைவண்டி நிலையத்தில் உங்களோடு
தலைக்கூடுவார்.
|