|
எழுவாய் வேற்றுமைப் பெயர்களாக
வழங்கிவருகின்றன. தொல் காப்பியர் இருவகை
வழக்கிற்கும மாறாக, நெடுமுதல் குறுகிய நும் என்னும்
திரிவேற்றுமையடியை எழுவாய் வேற்றுமைப் பெயராகக்
கூறியிருத்த லால் (தொல். 325, 326, 628), அவர்
காலத்தில் (கி.மு. 6ஆம் அல்லது 7ஆம்
நூற்றாண்டு)மராட்டி திராவிட மொழியாகக்
கருதப்பட்டிருக்கலாமென்றும்,அதில் நும் என்னும்
வடிவம் முன்னிலைப் பன்மை முதல் வேற்றுமைப்
பெயராக வழங்கி யிருக்கலாமென்றும் கருத இடமுண்டு.
நகரம் தகரமாகத் திரிவது இயல்பே.
எ-டு:
நீர்-தீர் (பி.), நேரம்-தேரம் (கொச்சைத்தமிழ்),
நேரம்-தேர் (இ.), நோக்கு-தேக்
(இ.),திருமான் - ஸ்ரீமத்(வ.)
படர்க்கைப் பெயர்கள்
|
|
்ஒருமை
|
பன்மை
|
|
அண்மை: சேய்மை:
|
யஹ்(இவன்,இவள்,இது)
வஹ்(அவன்,அவள்,அது)
|
யே (இவர்கள்,இவை)
வே (அவர்கள்,அவை)
|
வோ என்னும் சேய்மை ஈரெண்ணிற்கும்
பொது. யஹ் என்பது ஏ என்றும், வஹ் என்பது ஓ என்றும்
உலக வழக்கில் வழங்குகின்றன.
திரிவேற்றுமை யடிகள்
யஹ்-இஸ்
வஹ்-உஸ்
|
யே-இன்
வே-உன் |
இவ் வமைதியினாலும், ஹிதர் உதர்
என்னும் சுட்டுப்பெயர் களாலும், இந்தியில்
அண்மைச் சுட்டுச்சொற்கள் இகரவடியினின் றும்
சேய்மைச் சுட்டுச்சொற்கள் உகரவடியினின்றும்,
பிறந் திருப்பதைக் காணலாம்.
முன்மை குறுஞ்சேய்மையாதலின்,
உகரச்சுட்டு வடநாவலம் என்னும் முது
வடதிரவிடத்தினின்று திரிந்த மொழிகளில்,
சேய்மைச் சுட்டாக வழங்குகின்றது.
குறிப்புச்சொற்கள்
|
தமிழ்
|
இந்தி
|
குறிப்புப்பொருள்
|
ஆ
ஏ ஆகா
|
ஆ
ஏ
ஆஹா
|
வியப்பு
வியப்பு
வியப்பு
|
|