| | மேலுக்கு = மேற்பார்வைக்கு, வெளிக்கு. |
| | மேனி = மேற்புறம், உடம்பு. |
| | மேடு = உயரமான இடம். |
| | மேடு - மோடு. மேடை = மேடான இடம். |
| (b) | மிகு = மேலாகு, மிஞ்சு. |
| | மிசை = மேல். |
| | மிஞ்சு = மிகுதியாகு, அளவு கட. மிஞ்சு - விஞ்சு = மிகு. |
| | மிச்சம் = மீதி. |
| (c) | மீ = மேல், மீதியாகு. |
| | மீமிசை = மிக மேல், ஓர் இலக்கணம். |
| | மீதி = மிகுதி. மீத்தம் = மீத்து வைத்த பொருள். மீதம் = மீதி. |
| | மீது = மேல், 7ஆம் வேற்றுமை உருபு. |
| (d) | மீறு = வரம்பு கட. |
| | மீறு - வீறு = பெருமை, பெருமை கொள். |
| | வீற்று + இரு = வீற்றிரு = பெருமையுடனிரு. |
| (e) | மெத்து = மேற்கொள், தோற்கடி. மெத்தை = மேல்வீடு. |
| | மெச்சு = உயர்த்திப் பேசு. |
| 41. ஐ. | |
| | ஐ = வியப்பு, பெருமை. |
| | 'ஐ வியப்பாகும்' (தொல். உரி. 89) |
| | ஐயன் = பெரியோன், தலைவன், தந்தை, அரசன், கடவுள், ஆசிரியன், முனிவன், சிவன். |
| | ஐயனார் = சாத்தனார். |
| | தம் + ஐயன் = தமையன் = அண்ணன். |
| | ஐயை = அம்மை, பார்வதி. |
| | ஐயா = ஐயன் என்பதன் விளி. |
| | ஐயோ = (ஐயன் என்பதன் விளி) இரக்கக்குறிப்பு. |
| 42. ஓ. | |
| | ஓ = ஒலிக்குறிப்பு. |
| | (a) ஓசை - ஓதை. |
| | ஓது = ஒலி செய், படி. |
| | ஓலம் = ஒலி, முறையீடு. |
| (b) | ஒல் = ஒலிக்குறிப்பு. ஒல் - கொல் = ஒலிக்குறிப்பு. |
| | ஒல் - ஒலி. ஒல்லென = விரைவாக. |