சீதை இராமனுக்குத் தங்கையென்றும், இராமன் தன் தங்கையை மணந்தானென்றும், இராமன் இராவணன் மனைவியைக் கவர்ந்தா னென்றும், பல்வேறாக நாற்பது இராமாயணக் கதைகளிருப்பதாகச் சொல்லப்படுவதாலும், இராமாயணம் கட்டுக் கதையென்று ஆராய்ச்சி யாளராற் கருதப் பெறுவதாலும், எந்த இராமாயணக் கதை வேறுபாட்டை யும் தடை செய்யக் கூடாதென்பது ஒரு சாரார் கருத்து. |
அறிவன், பறம்பை. |
* மொழி வளர்ச்சிக்குரிய தங்களின் வருங்காலத் திட்டமென்ன? |
தமிழிலுள்ள அயற் சொற்களெல்லாம் களைந் தெறியப்படல் வேண்டும். வழக்கு வீழ்த்தப்பட்ட பழந்தமிழ்ச் சொற்கள் புதுக்கப் பெறவும், இக் காலத்திற்கேற்ற புதுச் சொற்கள் தனித்தமிழிற் புனையப் பெறவும் வேண்டும். |
ஆட் பெயர், பொருட் பெயர், இடப் பெயர் எல்லாம் தமிழ்ச் சொற்களாயிருத்தல் வேண்டும். |
அயற் சொற்போன்றே அயலெழுத்தும் வேண்டா. |
மேலை அறிவியல் நூல்களெல்லாம் தமிழில் மொழிபெயர்க்கப் பெறல் வேண்டும். |
தமிழ் நாட்டு ஆட்சியும் தமிழர் சடங்கும் திருமணமும் கோயில் வழிபாடும் தமிழில் நடைபெறல் வேண்டும். |
உயர் மேற் கல்வி கற்கவும் வெளிநாடு செல்லவும் விரும்புவார்க்கு ஆங்கிலத்திலும், உள்நாட்டிற் பிழைப்பிற்காக மட்டும் கல்வி கற்பார்க்குத் தமிழிலும், ஆக இரு மொழியிலும், முதலிலிருந்து இறுதிவரை கல்வி கற்பிக்கப் பெறல் வேண்டும். |
இந்தியும் சமற்கிருதம் என்னும் வடமொழியும் தமிழர்க்கு வேண்டா. தமிழ் கெட்டதே சமற்கிருதத்தால்தான். மேலை யாரியத்தைச் சேர்ந்த ஆங்கிலம் கீழையாரியமாகிய சமற்கிருதத்தினும் தமிழுக்கு மிக நெருக்கமாகும். இவ் வுண்மையை ஆராய்ச்சியில்லார் அறியார். |
இந்திய ஆட்சி ஆங்கிலத்திலேயே நடைபெறல் வேண்டும். வடவர் இதற் கிசையாவிடின், தமிழ்நாடு மொழியியல் தன்னாட்சி (linguistic autonomy) பெறல் வேண்டும். அதன்படி, தமிழ்நாட்டொடு நடுவண் ஆட்சிக்கும் (Central Govt.) பிற சீமைகட்கும் (மாகாணங்கட்கும்) ஆங்கிலத்திலேயே தொடர்பிருக்க முடியும். |
இந்தியைப் பொது மொழியாகத் தமிழறிஞர் ஒப்புக் கொள்ள வில்லையென்றும், அது பொது மொழியாகும் தகுதியுடையதன் றென்றும், அதுவும் ஆங்கிலம்போல் தமிழர்க்கு அயன்மொழியும் ஆரியமொழியு மாகு மென்றும், ஆங்கிலம் அறிவியன் மொழியும் இந்திய மொழியும் உலகப் பொது மொழியுமா |