| செய்கின்று + அ = செய்கின்ற - செய்கிற. |
| செய்கின்று என்னும் வாய்பாட்டு வினைச் சொல் எச்சப் பொருளில் வழக்கற்றது. |
| வினைச்சொல் வகைகளும் அவற்றின் இடைநிலைகளும், ஈறுகளும், அவற்றிற்குரிய இடங்களில் விரிவாக விளக்கப்பெறும். |
அ16 | (குறிப்புப் பெயரெச்சவீறு) சுட்டாட்சி பற்றியது. |
அ17 | (நிகழ்கால வினையெச்சவீறு) அல்லீற்றுத் தொழிற் பெயரின் ஈறுகேட்டால் நேர்ந்தது. |
| செய்யல் (வேண்டும்) - செய்ய (வேண்டும்). |
| "வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும்." | |
(தொல். எழுத். தொகை. 14) |
அ18 | பொருள் வேறுபாடு பற்றியது. |
அ19 | பலுக்கெளிமை நோக்கியது. |
அ20 | அகரத்தின் முதன்மையும் மாத்திரையும் பற்றியது. |
அ21 | முதற்குறிப்பு. |
4. குறி |
அ23 | (எட்டென்னும் எண்குறியும் வல்லூற்றின் குறியும்) எண்வகைப்பட்ட பொருளின் அல்லது பொருட்டொகுதியின் பெயர் முதலெழுத்தாகவும், வல்லூற்றின் பெயர் ஒன்றன் முதலெழுத்தாகவும் இருக்கலாம். இருபெயரும் இறந்துபட்டன போலும். |
சிறப்புக் குறிப்பு |
எழுத்துக்களை யெல்லாம் உயிரும் மெய்யும் எனக் கூறுபடுத்தி யும், உயிரெழுத்துக்களையும் மெய்யெழுத்துக்களையும் பிறப்பும் ஒலியும் பற்றி முறைப்படுத்தியும், உயிருக்கும் மெய்க்கும் போன்றே உயிர்மெய் கட்கும் வேறு வரிவடிவமைத்தும், வண்ணமாலை (alphabet) முதன் முதலாக அமைக்கப் பெற்றது தமிழிலேயே. உயிரும் மெய்யும் மட்டுங் கொண்டது குறுங்கணக்கு என்றும், அவற்றொடு உயிர்மெய்யுங் கொண் டது நெடுங்கணக்கு என்றும், பெயர்பெறும். இருவகைக் கணக்கிலும் அகரமே தமிழின் முதலெழுத்தாம். |
வேத ஆரியர் இந்தியாவிற்குட் புகுந்த பின்னும், நீண்டகாலம் எழுத்தின்றித் தம் முதனூலாகிய வேதத்தை வாய்மொழியாகவே வழங்கி வந்ததனால், அஃது 'எழுதாக் கிளவி' எனப்பட்டது. தமிழரோடு தொடர்பு கொண்ட பின்பே, முதலிற் கிரந்த வெழுத்தையும் பின்பு தேவநாகரி யையும் 'அவர்' அமைத்துக் கொண்டனர். இற்றைத் தமிழெழுத்திற்கும் அசோகன் கல்வெட்டுப் பிராமி யெழுத்திற்கும் யாதொரு தொடர்பு மில்லை. இதன் விளக்கத்தை 'நெடுங்கணக்கு' என்னும் உருப்படியிற் கண்டுகொள்க. |