பக்கம் எண் :

போலிக யுருப்படிகள்35

தாழ்வு. இம் முக் கருத்தும் ஓரினப்பட்டன. ஆழமில்லாத கிண்ணம் தட்டம் எனப் பெயர் பெற்றிருத்தல் காண்க.

பொருள்வகை :

(1)

ஆட்டுக் கொம்பவரை = ஆட்டுக் கொம்புபோல் வடி வுள்ள அவரை; kind of bean that resembles goat's horn in shape

(2)

ஆரால் மீனவரை = ஆரால் மீன் போன்ற வடிவுள்ள அவரை; kind of bean that resembles sand - eel in shape.

(3)

ஆனைக் காதவரை = ஆனைக் காது போல் வடிவுள்ள அவரை; kind of bean that resembles elephant's ear in shape.

(4)

கணுவவரை = கொடியின் கணுக்களிற் காய்க்கும் அவரை; kind of bean that brings forth fruits at joints also.

(5)

கொழுப்பவரை = குட்டையாகக் கொழுத்த சதையுள்ள அவரை; kind of bean that is short and fleshy.

(6)

கோழியவரை (கோழிக்கா லவரை) = கோழி விரல் போன்ற வடிவுள்ள அவரை; canavalia gladiata

(7)

சிவப்பவரை - செவ்வவரை = செந்நிற அவரை; a red variety of bean, lablab cultratus.

(8)

சிற்றவரை - மணியவரை = a small variety of bean.

(9)

தீவாந்தர வவரை = கீழைத் தீவினின்று வந்த அவரை; a bean from the eastern islands (w).

(10)

நகரவரை - dolichos rugosus (W)

(11)

பாலவரை - வெள்ளவரை; a white variety of bean,

 

"அவரைக் கொழுங்கொடி விளர்க்காய்
கோட்பத மாக."

(புறம். 120: 10-11)

(12)

பேரவரை - a large variety of bean.

(13)

முறுக்கவரை = திருகல் முறுகலாகவுள்ள அவரை; psopha carpus tetragonolobus.

இனப்பொருள்கள்

(1)

கப்பல் அவரை = french beans

(2)

காட்டவரை = கொழுப்பவரை போன்றதாயுள்ள மொச்சை (சேலம் வழக்கு); wild bean, lablab vulgaris.

     வீட்டுப் புறத்தில் விளைவிக்கப்படும் அவரையை நோக்கி மொச்சை காட்டவரை எனப்பட்டது. இதனால், அவரைக்கு வீட்டவரை என ஓர் அடைமொழிப் பெயர் பெறப்படும்.