| பதம் - பாதம் - வ. (Skt.) பத, பாத. Gk. pod. L. ped, pedis, OE, OS fot, OHG. fuoz, ON. fotr, Goth. fotus, E.foot. | | பாதை -OE. poeth. OLG. pad, OHG. pfad, E. path. | சமற்கிருதத்திற் பாதை என்னும் சொல் இல்லாதது கவனிக்கத் தக்கது. பத என்னும் சொல்லே அதிற் பாதையைக் குறிக்கும். | ped என்னும் இலத்தீன் சொல்லினின்றே, pedal, pedate, pedestal, peduncle என்னும் சொற்கள் திரிந்துள்ளன. | வதி - வசி - வ. (Skt) வஸ். இவ் வடசொல்லே ஆங்கிலத்தில் was என்னும் இறந்த காலத் துணைவினைச் சொல்லாகத் திரிந்து வழங்குகின்றது. | "was.-The OE. weson, to be, is eognate with Goth, wisan; ON. vera. to be, abidy; Skt. vas. to dwell." (P.266) | "were=OE. wo eron, where is for original S."(P 267) | என்று இரிச்சார்டு மாரிசு (Richard Morris) தம் 'ஆங்கிலச் சொற்றிரிபு வரலாற்றுச் சட்டகம்' (Historiacal Outlines of English Accidence) என்னும் நூலில் வரைந்திருத்தல் காண்க. இவ் விறந்த காலச் துணைவினைச் சொல் மட்டுமன்றி, is, are என்னும் நிகழ்காலத் துணைவினைச் சொற்க ளும் 'இரு' என்னும் தமிழ்ச்சொல் திரிபே என்பது, என் 'A Guide to Western Tamilologists' என்னும் ஆங்கில நூலில் விரிவாகவும் தெளிவாக வும் விளக்கப்பெறும். | தமிழ்த் தகரம் வடமொழியில் ஸகரமாகத் திரிவதை மாஸ என்னும் சொல்லாலும் உணர்க. மதி - மாதம் - மாஸ(வ.) - மாஸ்(இ.). | சிறப்புக் குறிப்பு: | பத, பாத என்னும் சொற்கள் வடமொழியில் வழங்குவ தால், தமிழ்ப் புலவர் பலர் அவற்றை வடசொல்லென்றே மயங்கி அடி என்னும் சொல்லைப் பாதம் என்னும் பொருளில் ஆண்டுவருகின்றனர். அடி வேறு; பாதம் வேறு. அடி என்பது ஒரு பொருளின் அடிப்பகுதி யையும் ஓர் உயிரியின் காலையும் பாதத்தையும் குறிக்கும் பொதுச் சொல். எ-டு: அடித்தட்டு, மயிலடி,திருவடி, அடிப் பகுதி யென்பது கீழ் இடத்தையும் கீழ்ப் பொருளையுங் குறிக்கும். எ-டு: பந்தலடி, தேரடி, சிறிய திருவடி பெரிய திருவடி. மரவடி என்பது கால்போன்ற அடிமரம். பாதம் என்பதோ நிலத்திற் பதியும் பரந்த அடியுறுப்பையே அல்லது பகுதியையே குறிக்கும் சிறப்புச் சொல். எ-டு: பாதத் தாமரை, பாதம் வைத்த விளக்கு. ஆகவே, பதிதல் என்பதை வேர்ப் பொருளாகக் கொண்ட பதம், பாதம் என்னும் இரு சொற்களும் தூய தென் சொல்லே யென்றும், அவையே முறையே பத, பாத என வடமொழியில் திரியும் என்றும் அறிக. இனி, பாதம் படுவதால் ஏற்படும் வழியைக் குறிக்கும் பாதை யென்னும் சொல், ஆங்கிலத்தில் (path என) இருப்பதையும் வடமொழியில் இன்மையையும், நோக்குக. | வஸ் (வசி), என்னும் சமற்கிருத வினைச் சொற்கும். அதன் திரிவான 'was' என்னும் ஆங்கில இறந்த கால வினைச்சொற்கும், வதி என்னும் | | |
|
|